உ.பி.யில் பலாத்காரங்கள் ரொம்ப கம்மி: சர்ச்சையை கிளப்பிய முலாயசிங்.

mulayam_singh_001உத்தரப்பிரதேச மக்கள் தொகையோடு ஒப்பிட்டால் அங்கு நடக்கும் பலாத்கார சம்பவங்கள் குறைவு தான் என சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயசிங் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் நடக்கும் பலாத்கார சம்பவங்கள் தற்போது வெளிச்சத்திற்கு வர ஆரம்பித்துள்ளது.

குழந்தைகள், இளம்வயது பெண்கள்,சிறுமிகள் என வயதுவரம்பு இல்லாமல் அனைத்து தரப்பு பெண்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த சம்பவங்களால் அங்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருப்பதாக எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டுகின்றன. சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயசிங் ஏற்கெனவே ‘பசங்கன்னா விளையாட்டுத்தனமாக பலாத்காரம் செய்துவிடுகிறார்கள் என்று கூறி சர்ச்சையில் சிக்கினார்.

இந்நிலையில் முலாயம் சிங் யாதவ் உத்தரபிரதேச மாநிலத்தில் நடக்கும் பலாத்கார சம்பவங்கள் குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், உத்தரபிரதேசத்தின் மக்கள் தொகை 21 கோடி. இந்த மக்கள் தொகையோடு ஒப்பிட்டுப் பார்த்தால், பலாத்காரச் சம்பவங்கள் குறைவாக தான் நடக்கிறது என்று கூறியுள்ளார். முலாயம்சிங் யாதவின் இந்த கருத்து புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது

Tags: , ,

Leave a Reply