வடக்கில் மேலும் தமிழீழ விடுதலைப் புலிகள் சந்தேக நபர்கள், கைது செய்யப்படலாம் என காவல்துறையினர் இன்று (21)அறிவித்துள்ளனர். அண்மையில் மலேசியாவில் வைத்து மூன்று தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது யாவரும் அறிந்ததே.
இவர்கள் அனைவரையும் தற்போது 4ம் மாடிக்கு கொண்டு சென்று விசாரித்து வருகிறார்கள் புலனாய்வு துறையினர். இவர்கள் கடுமையாக விசாரிக்கபப்ட்டு வரும் நிலையில், இவர்கள் தகவல் கொடுத்தார்கள் என்ற அடிப்படையில் மேலும் சில் முன் நாள் புலிகள் கைதாகலாம். மேலும் இவர்கள் தகவல் சொன்னதாக கூறி புலம் பெயர் நாட்டில் தமக்கு வேண்டாத சிலர் மீதும் இலங்கை காவல் துறையினர் வழக்குகளை பதிவு செய்யவும் வாய்புகள் உள்ளது என்று கொழும்பில் இருந்து கிடைக்கும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் இச் சந்தேக நபர்களை தொடர்ந்தும் விசாரித்து வருகிறார்கள். இவர்கள் தேசிய தலைவர் பிரபாகரன் அவர்கள், இவ்வாறு ஒரு பாரிய தோல்வி ஒன்று வரும் என்று நினைத்து கூட பார்கவில்லை என்ற தகவலை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மலேசியாவில் பெரும் எண்ணிக்கையிலான தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் இருப்பதாக சந்தேக நபர்கள் குறிப்பிட்டனர் என கொழும்பு ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
















