நயன்தாராவுடன் இரண்டு இரவுகள். நடிகரின் வித்தியாசமான அனுபவம்

twice-with-nayantharaசிம்புவுடன் நடிக்கும் ‘இது நம்ம ஆளு’ படத்தை தொடர்ந்து நயன்தாரா மேலும் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். கார்த்தியுடன் கொம்பன், மற்றும் ஆரியுடன் ‘நைட் ஷோ’ ஆகிய இரண்டு படங்களிலும் நயன்தாரா நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களிலும் காமெடி கேரக்டரில் கருணாஸ் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரியாணி படத்திற்கு பிறகு வெங்கட்பிரபு இயக்கும் திரைப்படம் மாஸ். இந்த படத்தில் சூர்யா, நயன்தாரா மற்றும் எமிஜாக்சன் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தில் காமெடி கேரக்டரில் நடிக்க கருணாஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பொதுவாக காமெடியன்கள் ஹீரோவுக்கு துணையாகத்தான் வருவார்கள். ஆனால் மாஸ் படத்தில் நயன்தாராவின் நண்பராக நடித்து வருகிறாராம் கருணாஸ்.

மேலும் நயன்தாரா நடிக்கும் இன்னொரு படமான நைட்ஷோவிலும் காமெடி கேரக்டரில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் கருணாஸ். சமீபத்தில் நயன்தாராவுடன் காமெடி ரோலில் “மாஸ்” படத்தில் நடித்துவிட்டு அடுத்த நாளே “நைட்ஷோ” படத்தில் மீண்டும் நயன்தாராவுடன் நடித்த அனுபவத்தை கருணாஸ் பெற்றுள்ளாராம். இரண்டு படங்களின் படப்பிடிப்பும் இரவில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நயன்தாராவுடன் அடுத்தடுத்து நடிப்பதால் தான் இன்று எந்த படத்தில் நடிக்கிறோம் என்பதே புரியாமல் குழம்பியதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த இரண்டு படங்களை தவிர குட்டிப்புலி படத்தை இயக்கிய முத்தையா அடுத்த இயக்கும் கொம்பன் படத்திலும் கருணாஸ் நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. கார்த்தி – லட்சுமி மேனன் ஜோடியாக நடிக்கும் இந்த படத்தில் கருணாஸுக்கு தனி காமெடி டிராக் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: , ,

Leave a Reply