கிளாஸ்கோ பயணத்தைக் கைவிட்டார் ஜனாதிபதி மஹிந்த!

mahinda-rajapaksa4-600கிளாஸ்கோவில் நாளை ஆரம்பமாகவுள்ள பொதுநலவாய நாடுகள் விளையாட்டுப் போட்டியின் ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பங்கேற்க மாட்டார் என ஜனாதிபதியின் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் விஜயத்திற்கு புலம்பெயர் தமிழர்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ள நிலையில், அவர், கிளாஸ்கோ சென்றால் எதிர்ப்பு போராட்டங்கள் நடத்தப்படக் கூடுமெனவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும், இவ்வாறான அழுத்தங்களுக்கு அஞ்சி ஜனாதிபதி கிளாஸ்கோ விஜயத்தை ரத்து செய்யவில்லை என மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.

பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தவிசாளராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 2010ம் ஆண்டிலும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஜனாதிபதியினால் ஆற்றப்படவிருந்த விசேட விரிவுரை எதிர்ப்பு காரணமாக இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: , ,

Leave a Reply