மன்னாரில் கைதான தமிழக மீனவர்கள் 20 பேருக்கும் விளக்கமறியல்.!

fisher manஇலங்கையின் மன்னார் கடற்பரப்பில் நேற்து முன்தினம் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செயப்பட்ட 20 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஆனந்தி கனகரட்ணம் உத்தரவிட்டார்.

தமிழகத்திலிருந்து 4 படகுகளில் வந்த 20 மீனவர்களை மன்னார் கடற்படையினர் கைது செய்து, கடற்றொழில் நீரியல் வளத்துறையினரிடம் ஒப்படைத்தனர். கைதான மீனவர்களை நீரியல் வளத்துறையினர் மன்னார் நீதிமன்றத்தில் இன்று முற்படுத்தினர். இதன்போது அவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

Tags: , ,

Leave a Reply