இங்கிலாந்து குட்டி இளவரசர் ஜார்ஜின் முதலாவது பிறந்தநாளுக்கு £1மில்லியன் மதிப்புள்ள நெயில்கட்டர் பரிசு.

nail-cutertஇங்கிலாந்து அரச குடும்பத்தின் குட்டி இளவரசர் ஜார்ஜ் அவர்களின் முதலாவது பிறந்தநாளுக்கு பரிசு கொடுப்பதற்காக £1மில்லியன் மதிப்புள்ள நெயில்கட்டர் (Nail Cutter) ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. முற்றிலும் 18 கேரட் தங்கத்தினால் ஆன இந்த நெயில்கட்டரின் கைப்பிடியில் £2,000 மதிப்புள்ள 350 வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள Tom Pellereau என்பவருக்கு சொந்தமான Stylfile என்ற நிறுவனம் இந்த விலைமதிப்புள்ள நெயில்கட்டரை தயார் செய்துள்ளது.இந்த நெயில்கட்டரை செய்வதற்காக ஐந்து பேர் அடங்கிய ஒரு சிறப்புக்குழு பத்து நாட்களாக இரவு பகலாக பணிபுரிந்து இந்த நெயில்கட்டரை தயார் செய்துள்ளனர்.

இந்த நெயில்கட்டருக்கு உலகின் மிக விலையுயர்ந்த பரிசுப்பொருள் என்ற பெருமை கிடைத்துள்ளது. இது குழந்தைகள் மட்டுமே பயன்படுத்துவதற்குரியது என்றும் கூறப்படுகிறது. இதில் பதிக்கப்பட்டுள்ள 350 வைரங்களும் முதல் தரமானது என்றும், வெள்ளை நிறத்தில் உள்ளவை என்றும் கூறப்படுகிறது.

Tags: , ,

Leave a Reply