ஆடுகளம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் டாப்சி. இவர் சமீபத்தில் மீடியா ஒன்றிற்கு பேட்டியளிக்கும் போது தான் தினமும் நூறு சிகரெட் குடிக்கிறேன் எனக்கூறி அதிர்ச்சி கொடுத்தார். இந்த விஷயம் அறிந்த பலரும் நடிகையின் ஒப்பன் ஸ்டேட்மென்ட்யை பார்த்து அதிர்ந்து விட்டனர்.
பின்பு முழுவிசயமும் அறிந்த பின் தான் தெரிகின்றது, இது நடிகையின் சமூக விழிப்புணர்வு எச்சரிக்கை என்று. சிகரெட் பிடிப்பதில் என்ன சமூக விழிப்புணர்வு உள்ளது என கேட்கின்றீர்களா? டாப்சி நாயகியாக நடிக்கும் படத்தின் படபிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகின்றது. இதனால் டாப்சி மும்பையில் தங்கி படப்பிடிப்பில் கலந்துகொண்டு வருகின்றார். மும்பை நகரம் முழுவதும் வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளால் காற்று மாசடைந்துள்ளது. இந்த நகரத்தில் உள்ளவர்கள் தினமும் மாசடைந்த கற்றை சுவாசித்து தான் வாழ்க்கை நடத்துகின்றனர். இந்த மாசடைந்த காற்று 100 சிகரெட்டுக்கு சமம். தற்பொழுது டாப்சியும் இந்த நகரத்தில் தான் தங்கியுள்ளார். அதனால் தான் டாப்சியும் 100 சிகரெட் குடிப்பதாக கூறி அதிர்ச்சியுடன் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். இது தான் டாப்சி செய்த சமூக விழிப்புணர்வு எச்
















