மகேஷ்பாபுவுடன் ஜோடி சேரும் ஸ்ருதிஹாசனுக்கு ரூ.2 கோடி சம்பளம். தெலுங்கு திரையுலகில் பரபரப்பு.

shruthi-maheshbabu-movieமகேஷ்பாபு, தமன்னா நடிப்பில் உருவாகி வரும் ‘அகடு’ தெலுங்கு திரைப்படம் முடிவடையும் நிலையில் உள்ளது. வரும் செப்டம்பர் மாதம் இந்த படம் ரிலீஸாகும் என எதிர்பார்த்திருக்கும் நிலையில் மகேஷ்பாபு தனது அடுத்த படத்தை முடிவு செய்துள்ளார்.

தெலுங்கில் நம்பர் ஒன் நடிகராக இருக்கும் மகேஷ்பாபு, அகடு படத்தை அடுத்து கொரட்டாஆ சிவா இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மைத்ரி மூவீஸ் என்ற நிறுவனம் தயாரிக்க இருக்கும் இந்த பிரமாண்டமான படம் வரும் செப்டம்பர் 11ஆம் தேதி பூஜையுடன் ஆரம்பிக்க உள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

இந்த படத்தில் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக நடிக்க இலியானா, தமன்னா, காஜல் அகர்வால் ஆகிய மூவரும் கடும்போட்டியில் இருந்தனர். ஆனால் வாய்ப்பு கிடைத்ததோ ஸ்ருதிஹாசனுக்கு என்று கூறப்படுகிறது. ஸ்ருதிஹாசன் தற்போது தமிழ் மற்றும் இந்திப்படங்களில் பயங்கர பிசியாக இருந்தபோதிலும், மகேஷ்பாபு படம் என்பதால் கால்ஷீட்டுக்களை அட்ஜெஸ்ட் செய்து கொடுக்க சம்மதித்துள்ளார். மேலும் இந்த படத்திற்காக அவருக்கு ரூ.2 கோடி சம்பளம் கொடுக்க தயாரிப்பு நிறுவனம் சம்மதித்துள்ளது.

ஸ்ருதிஹாசன் சமீபத்தில் மும்பையில் ஆடம்பரமான வீடு ஒன்று வாங்கியதில் ஏற்பட்ட கடனை சரிசெய்ய இரவு பகலாக நடித்து சம்பாதித்துக்கொண்டிருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.

Tags: , ,

Leave a Reply