மகிந்தவின் ஸ்கொட்லாந்து வருகையை எதிர்த்து பிரித்தானிய வாழ் தமிழர்கள் ஸ்கொட்லாந்து கிளாஸ்கோவில் மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
ஒன்றிணைந்த தமிழ் மக்களின் உணர்வுக் கொந்தளிப்பில் ஜனாதிபதி மகிந்தவின் ஸ்கொட்லாந்து வருகையை நிறுத்தும் நோக்கிலேயே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. பொது நலவாய விளையாட்டு ஆரம்ப விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்க இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச வருகை தர இருப்பதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்தே பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரின் ஏற்பாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட இந்தப் போராட்டத்தில் பிரித்தானியாவில் வாழ்கின்ற தமிழ் மக்கள் இன்று கலந்த கொண்டிருந்தனர். தமிழ் மக்கள் மீதான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை உலக நீதிமன்றில் வெளிக்கொண்டு வந்து தங்கள் இலக்கை வெல்லும் வரை சளைக்காமல் செல்வோம் என்னும் உறுதியோடு மக்கள் போராட்டத்தின் தொடராகவே இன்றைய போராட்டமும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
எனினும் இன்றைய விளையாட்டு விழாவை ஆரம்பித்து வைக்க ஸ்கொட்லாந்து கிளாஸ்கோ வருகை தர இருந்த பொதுநலவாய அமைப்பின் தலைமைப் பொறுப்பைத் தற்போது வகிக்கும் மகிந்த ராஜபக்சவின் வருகை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
















