குட்டி இளவரசர் ஜார்ஜ், 18 வயதாகும்போது எப்படி இருப்பார்? ஹங்கேரி டிசைனரின் கற்பனை படம்.

george-aged-at-18பிரிட்டன் அரச குடும்பத்தின் குட்டி இளவரசர் ஒருவயது ஜார்ஜ் அவர்கள் 18 வயதாக இருக்கும்போது எப்படி இருப்பார் என்பதை ஹங்கேரி நாட்டின் டிசைனர் ஒருவர் டிசைன் செய்து இணையத்தில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவு உலகம் முழுவதும் பரவி வருகிறது.

பிரிட்டன் அரச குடும்பத்தின் குட்டி இளவரசர் என்று போற்றப்படும் ஜார்ஜ் அவர்களின் முதலாவது பிறந்தநாள் வெகுவிமரிசையாக நடந்துள்ள நிலையில் அவர் 18 வயதாக இருக்கும்போது எப்படி இருப்பார் என்பதை கற்பனை செய்தும், அவருடைய பெற்றோர்களின் புகைப்படங்களை ஆய்வு செய்தும், ஹங்கேரி நாட்டின் டிசைனர் Nikolett Mérész என்பவர் படம் ஒன்றை கம்ப்யூட்டரில் வரைந்துள்ளார்.

டிசைனிங் மற்றும் illustrator நிபுணரான இவர் குட்டி இளவரசர் ஜார்ஜ் அவர்களின் பெற்றோர்களின் புகைப்படத்தை வைத்து ஜார்ஜ் அவர்களின் 18 வயது இளைஞரின் படத்தை வரைந்ததாகவும், அவர் தன்னுடைய தாயாரின் குழிவிழுந்த கன்னத்தையும், தந்தையின் முக அமைப்பையும் பெற்று இருப்பார் என்று கூறியுள்ளார்.

30 வயதான ஹங்கேரி டிசைனர் Nikolett Mérész அவர்கள் மேலும் கூறியபோது, ஜார்ஜ் அவர்கள் வளர்ந்த பிறகு அவருடைய தந்தையை போல முடி அமைப்பை பெற்றிருப்பார் என்றும் அவர் மேலும் கூறினார்

Tags: , ,

Leave a Reply