பிரபல நடிகையின் திருமண நாளில் பற்றி எரிந்த திருமண உடை. வயிற்றெரிச்சல் காரணமா?

blakelively-marriageபிரபல ஹாலிவுட் நடிகை Blake Lively திருமணம் சமீபத்தில் நியூயார்க் நகரில் நடந்தது. மாப்பிள்ளை வேறு யாரும் இல்லை இவருடைய போட்டியாளரும் சக நடிகையுமான Scarlett Johansson அவர்களுடைய முன்னாள் கணவர் Ryan Reynolds தான். Ryan Reynolds அவர்களும் Scarlett Johansson மிகவும் அந்நியோன்யமாக வாழ்ந்து வரும் வேளையில் திடீரென அவர்களது வாழ்க்கையில் குறுக்கிட்ட Blake Lively, Scarlett Johanssonன் கணவரை தட்டிப்பறித்துவிட்டார்.

Scarlett Johansson அவர்களின் வயிற்றெரிச்சல்தான் காரணமோ என்னமோ திருமணத்தன்று காலையில் நடிகை Blake Lively, அணிவதற்காக வாங்கிவைத்திருந்த திருமண ஆடை திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமாகிவிட்டது. இதனால் மிகவும் அப்செட்டான நடிகை Blake Lively, பின்பு வேறு வழியில்லாமல் வேறு ஒரு உடையை அணிந்து திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

எங்கள் திருமணத்தால் ஒருசிலருக்கு பொறாமை. அதனால்தான் இதுபோன்ற அசம்பாவித நிகழ்ச்சி நடந்துள்ளதாக திருமணத்திற்கு பின்னர் நடிகை Blake Lively, மறைமுகமாக Scarlett Johansson அவர்களை தாக்கியுள்ளார். இதனால் Scarlett Johansson கடுப்பில் இருப்பதாக கூறப்படுகிறது

Tags: , ,

Leave a Reply