அமெரிக்காவில் உள்ள ஒரு குற்றவாளி போலீஸாரிடம் இருந்து தப்பிப்பதற்காக குளத்தின் நடுவில் நின்று கொண்டு வெளியே வராமல் பலமணி நேரம் அலைக்கழித்து பின்னர் கைது செய்யப்பட்டார்.
அமெரிக்காவில் உள்ள Idaho என்ற மாகாணத்தை சேர்ந்த Eagle என்ற பகுதியில் McCoy என்ற 21 வயது வாலிபர், பெண் ஒருவர் மீது பொய்யான புகார் கொடுத்தார். அவருடைய புகாரை விசாரணை செய்த போலீஸார் அவர் கூறியது பொய்யான குற்றச்சாட்டு என தெரிந்ததும், அவரை கைது செய்ய வந்தனர்.
ஆனால் போலீஸாரிடம் இருந்து தப்பி ஓடி, அருகில் இருந்து கோல்ப் மைதானத்தில் அருகே இருந்த ஒரு குளத்தின் நடுவில் நின்று கொண்டார். போலீஸார் பலமுறை எச்சரித்தும், குளத்தில் இருந்து வெளியே வர மறுத்ததால், பின்னர் வேறு வழியின்றி இரண்டு போலீஸார் குளத்தில் இறங்கி அவரை கைது செய்தனர். அப்பாவி பெண் மீது பொய்ப்புகார் கூறிய குற்றச்சாட்டுக்காக தற்போது அந்த நபர் சிறையில் இருக்கின்றார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
















