வெளிநாட்டு நிபுணர்கள் குழு அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம்!

Group-foreign-Sri-Lanka-visitஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்க இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவால் நியமிக்கப்பட்ட மூன்று வெளிநாட்டு நிபுணர்கள் குழுவினர் அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது.

சேர் ஜெப்ரி நைஸ், சேர் டெஸ்மன் டி சில்வா, பேராசிரியர் டேவிட் க்ரோன் ஆகியோர் ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆலோசகர்களாக கடந்த 15 ஆம் திகதி நியமிக்கப்பட்டனர்.

மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் தொடர்பான விசேட நிபுணர்களாக இவர்களை ஆணைக்குழுவுடன் இணைத்து கொண்டதன் மூலம், அதன் வினைத்திறன் அதிகரிக்கும் என காணாமல் போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல் பரணகம தெரிவித்திருந்தார். அத்துடன் ஆணைக்குழுவிற்கு சர்வதேச அங்கீகாரமும் கிடைக்கும் என்றும் அவர் கூறியிருந்தார்.

Tags: , ,

Leave a Reply