சமீபத்தில் ஒரு முன்னணி வார இதழுக்கு பேட்டியளித்த அஞ்சான் நாயகர் சூர்யா, ஜோதிகா மீண்டும் நடிப்பது குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.
ஜோதிகா மீண்டும் திரையுலகில் ரீ எண்ட்ரி ஆவதற்கு கதை கேட்டுக்கொண்டிருக்கிறார் என்பது உண்மைதான் என்றும், ஆனால் அவர் என்னுடன் மட்டுமே ஜோடியாக நடிப்பார், வெறொருவர் ஹீரோவாக நடிக்கும் படத்தில் ஜோதிகா நடிக்க மாட்டார் என்றும் கூறியுள்ளார். இருவருக்கும் பொருத்தமான கேரக்டர்கள் வரும் கதையை தேடிக்கொண்டிருப்பதாகவும், அப்படி ஒரு கதை கிடைத்தால் கண்டிப்பாக ஜோதிகா மீண்டும் நடிப்பார் என்றும் சூர்யா கூறியுள்ளார்.
ஆனால் அதே நேரத்தில் ஜோதிகாவிடம் தொடர்ச்சியாக ஐம்பது நாட்கள் அல்லது நூறு நாட்கள் கால்ஷீட் கேட்டால் கண்டிப்பாக அவர் கொடுக்க மாட்டார். ஏனெனில் அவரால் குழந்தைகளை பிரிந்து சில மணிநேரங்கள் பிரிந்து இருக்க முடியாது என்று கூறியுள்ளார். தற்போது எங்களுடைய 2D பட நிறுவனத்தை ஜோதிகாதான் கவனித்து வருகிறார். எதிர்காலத்தில் ஜோதிகா என்னுடைய மற்றும் பிற ஹீரோக்களுடைய படங்களை தயாரிக்கும் ஒரு பெரிய தயாரிப்பாளராக மாற வேண்டும் என்பதே தன்னுடைய விருப்பம் என்று சூர்யா கூறியுள்ளார்.
















