எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் பாஹுபாலி திரைப்படத்தில் பிரபாசும், அனுஷ்காவும் ஜோடியாக நடித்து வருகின்றனர். படத்தில் ஜோடியாக, காதல் செய்யும் இந்த ஜோடி நிஜத்தில் இணையபோவதாக தெலுங்கு திரையுலகில் வதந்திகள் மிக வேகமாக பரவி வருகின்றன.
பிரபாசுக்கும் அனுஷ்காவும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாகவும், மிக விரைவில் இருவரும் திருமணம் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. பிரபாசின் சொந்த ஊரில் மிக நெருங்கிய உறவினர்கள் மத்தியில் இருவருடைய திருமண நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாகவும், அனுஷ்கா தற்போது நடித்துக்கொண்டிருகும், பாஹுபாலி, ருத்ரம்மாதேவி, லிங்கா, மற்றும் அஜீத் படம் ஆகியவை முடிந்த பின்னர் 2015 ஆம் ஆண்டி இறுதியில் திருமணம் நடைபெறும் என கூறப்படுகிறது.
தெலுங்கு திரையுலகிலும், தெலுங்கு ஊடகங்களிலும் கடந்த இரண்டு நாட்களாக பரவி வரும் ஹாட் நியூஸ் இதுதான். ஆனால் இருவரின் தரப்பில் இருந்து இதுவரை எந்தவித எதிர்ப்பும் இந்த செய்திக்கு வரவில்லை என்பதால் இந்த நிச்சயதார்த்தம் உறுதியாக நடந்திருக்கும் என கூறப்படுகிறது.
















