ஆஸ்திரேலிய சுங்கக் கப்பலில் வைத்திருக்கப்படும் 157 புகலிடக்கோரிக்கையாளரின் எதிர்காலம் அடுத்த மாதம் தீர்மானிக்கப்படவிருக்கிறது.
இவர்கள் எதிர்காலம் குறித்த விசாரணை, ஆகஸ்து மாதம் 5ம் நாள், கன்பராவில் ஆஸ்திரேலிய உயர் நீதி மன்றத்தால் தீர்மானிக்கப்படும். இந்த விசாரணை அதி கூடியது இரண்டு நாட்களே நடத்தப்படும் என்றும் இந்த விசாரணையின் முடிவு இரண்டு முக்கிய விடயங்களில் தங்கியிருக்கிறது என்றும் அறியப்படுகிறது.
இது குறித்து இவர்களுக்கு என்னதான் நடக்கும் என்பதைப்பற்றி சற்று ஆழமாகத்தான் பார்க்க வேண்டும் என்று பல தரப்பட்ட கருத்துக்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
வழக்காழரின் கருத்துக்கள்
சமுத்திரவியல் அதிகாரங்கள் சட்டத்தின் கீழ் புகலிடக் கோரிக்கையாளர்களை தடுத்து வைப்பது சட்டபூர்வமானதா என்பதைத் தீர்மானிக்கக்கூடிய வழக்கு விசாரணைக்கு மத்தியில் அவர்களை பிரதான நிலப்பரப்பிற்கு மாற்றும் முயற்சிகள் பற்றி அறிவிக்கப்படுகிறது.
அரசாங்கத்தின் திட்டம் குறித்த வழக்கில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. அத்துடன், அந்தத் திட்டம் பற்றி அரசாங்கத்திடம் இருந்து எதுவித ஊர்ஜிதப்படுத்தல்களும் கிடைக்கவில்லை
இலங்கையில் இருந்து படகுமூலம் புகலிடம் கோரி வந்தவர்கள் யூலை மதம் 7ம் திகதி அவுஸ்ரேலியா கிறிஸ்மஸ் தீவுக்கு அண்மையில் வைத்துத்தான் கைது செய்யப்படுள்ளதாக அவர்களுக்க வாதாடும் வழக்கறிஞ் யர்கள் கூறுகின்றனர்
அதுமட்டும் அல்லாமல் நடுக்கடலில் வைத்து இந்த புகலிடக் கோரிக்கையலர்களை விசாரிப்பது சட்ட நியாயங்களுக்கு அப்பால் பட்டது எனவும் அவர்களை வாதிடுரார்கள் .
புகலிடம் கோரி வரும் படகொன்றினை கடலில் இடை மறித்து அந்த அகதிகளை வேற ஒரு நாட்டுக்கு கையளிக்கும் உரிமை இருக்கின்றதா ?illai முடிவெடுக்கும் முறையில் நியாயம் இருக்கின்றதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளதுடன் , புகலிடக் கோரிக்கையலர்களை நடத்தும் முறை யானது சர்வதேச சட்டங்களை மீறிச் செயற் படுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்
புகலிட கோரிக்கையாலர்களின் படகை நடுக்கடலில் மரிக்கவோ அல்லது புகலிடக் கோரிக்க யாளர்களை மற்றைய நாடுகளுக்கு பாரம் கொடுப்பதற்கு அரசுக்கு உரிமை இருக்கின்றனவா என்பதை உயர் நீதி மன்றத்தின் குழு ஆயம் கன்பராவில் நடக்கும் அகஸ்ட் மாத இரண்டு நாள் சந்திப்பில் தீர்மானங்கள் எடுக்கப்படலாம் என நம்பபடுகின்றது.
25 நாட்களாக நடுக்கடலில் தடுத்து வைதுந்தவர்கள் தொடர்பாக மிகவும் நாலதொரு முடிவு எடுக்கப்டவேண்டும் என்றும் இவர்களின் வழக்குகள் அனைத்தும் மிக விரைவில் நடக்கப்பட வேண்டும் என்றும் உயர் நீதி மன்ற நீதிபதிகளும் வலியுறுத்தி உள்ளனர்
இந்த நிலையில் அரசு தாக்கல் செய்த ஆவணங்களில் புகலிடக் கோரிக்கையாளர்கள் எங்கு கொண்டு செல்லப்படுவார்கள் என்பது புலன் படவில்லை.
உயர் நீதி மன்றத்தில் புகலிடக் கோரிக்கையாலர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வளங்கப்ப்ட்டல் புகலிடக் கோரிக்கையாலர்களை அரசு அவுஸ்ரேலியாவுக்குள் அனுமதிக்கும என்பது சரியாக தெரியா வில்லை.
இந்த வழக்குகள் தோல்வி அடைந்தால் அவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பும் சாத்தியமும் இருக்கின்றது என்பது ஒரு சந்தேகமும் இருக்கின்றது
பசுமை கட்சி
அவுஸ்ரேலியாவின் இந்த கடும்போக்கு திட்டத்துக்கு இந்தியா ஒரு போதும் ஒத்துப் போகாது என்று சுட்டி காடியுள்ளதுடன் இவர்கள் னைவரும் இலங்கை தமிழர்கள் இலங்கையில் வாழ முடியாமல்தான் இந்தியாவில் அகதிகளாக இருந்தவர்கள்.
இவர்களுக்கு இந்தியாவிலும் குடியுரிமை வழங்கப்படவில்லை இந்த அகதிகள் தொடர்பில் அபட் அரசாங்கம் அரசியல் நடத்துவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்
பிரதமரின் கருது ;
இலங்கை மிகவும் நெருங்கிய நேசமிக்க நாடு இலங்கையில் நடந்த யுத்தங்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது அணைத்து சமூகமும் சுமுகமாக வாழ்வதற்க்கான சூழலை இலங்கை அரசு மக்களுக்கு ஏற்பட்தியுள்ளது.
மனித உரிமைகள் நன்றாக பேணப்பட்டு வருகின்றது அகவே இலங்கை அகதிகள் இன்னும் ஒரு நாட்டுக்கு அகதிகளாக இடம் பெயர வேண்டிய அவசியம் இல்லை.
இலங்கை எமது நேசமிக்க நாடு எந்தவகையிலும் அவர்களுக்கு உதவுவதற்கு தயாராக உள்ளதாகவும் தெரிவித்த அபட் இலங்கை அகதிகள் தொடர்பில் எமது கடும் போக்கு கொள்கையில் மாற்றம் ஏற்பட மாட்டது என ஆணித்தரமாக தெரிவித்தார்
குடிவரவு அமச்சர் மொரிசன்;
இவர்கள் அவுஸ்திரேலியாவினால் தடுத்து நிறுத்தப்பட்ட கப்பலில் உள்ள 157 தமிழ் அகதிகளில், இந்திய பிரஜைகளை மாத்திரம் பொறுப்பேற்க இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் ஸ்கொட் மொரிசன் உள்ளிட்ட குழுவினர், இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் வெளியுறவு அமைச்சர் சுஸ்மா சுவராஜ் ஆகியோரை சந்தித்தனர். இதன்போது இந்த இணக்கம் எட்டப்பட்டதாக கவும் மொரிசன் தெரிவித்தார்
இதில் இலங்கை அகதிகளை இந்தியா பாரம் எடுப்பதற்கு தயாராக இல்லாத நிலையில் இவர்களை இலங்கைக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்
ஆனால் இந்தியா payanathin பின்புதான் இவர்களை தரைக்கு கொண்டு வரும் முயற்சியில் மொரிசன் ஈடுபட்டுள்ளார் இந்த செயற்பாடு இலங்கை தமிழர்களுக்கு எவ்வளவுக்கு சாத்தியமாகும் என்பது மிகவும் உன்னிப்பாக பார்க்க கூடிய விடயமாகவே உள்ளது
















