உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைமையில் நம்பிக்கையில்லை என நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தின் பிரதமர் வீ.ருத்ரகுமாரன் தெரிவித்துள்ளார். யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்று நிறுவப்பட்டுள்ளது. காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தி வரும் ஆணைக்குழுவிற்கு, யுத்தக் குற்றச் செயல்கள் n;தாடர்பிலும் விசாரணை நடத்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எனினும், இந்த விசாரணைகளில் தமக்கு எவ்வித நம்பிக்கையும் கிடையாது என ருத்ரகுமாரன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசாரணைகளின் மூலமே நியாயத்தை எதிர்பார்க்க முடியும் என தெரிவித்துள்ளார். பக்கச்சார்பற்ற விசாரணைகளையே புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் ஆதரிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையில் நீதிமன்றக் கட்டமைப்பு சுயாதீனமான முறையில் இயங்காத நிலையில் விசாரணைகளின் மீது நம்பிக்கைக் கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி விசாரணைக்குழுவின் விசாரணைகளின் போது புலம்பெயர் தமிழ் சமூகம் சாட்சியமளிக்காது என அவர் தெரிவித்துள்ளார். சாட்சிகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்படாத நிலைமை நீடித்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் விசாரணைகள் நம்பகமானதாக அமையும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
















