“யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடைபெறுவதனை உறுதி செய்யுமாறு கோரிக்கை”
கறுப்பு ஜூலை கலவரத்தில் உயிர் நீத்தவர்களை பிரித்தானிய எதிர்க்கட்சித் தலைவர் இட் மில்லிபான்ட் நினைவு கூர்ந்துள்ளார்.
1983ம் ஆண்டு ஜூலை மாதம் இடம்பெற்ற வன்முறைகளில் ஆயிரக் கணக்கான தமிழ் மக்கள் சொல்லொனா துயரங்களை அனுபவிக்க நேரிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
ஜூலை கலவரம் தொடர்பில் வெளியிட்ட விசேட அறிக்கையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வருந்தத்தக்க வன்முறைகளில் உயிரிழந்த தமிழ் ஆண், பெண் மற்றும் இடம்பெயர்ந்தவர்கள் பற்றி நினைவு கூற வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வன்முறைகளில் எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்பது பற்றிய துல்லியமான புள்ளி விபரங்கள் கிடையாது என அவா தெரிவித்துள்ளார்.
வன்முறைகளை எம்மால் இன்றும் மறக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இரண்டு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வரவேற்கப்பட வேண்டியது என அவர் தெரிவித்துள்ளார்.
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடைபெறுவதனை உறுதி செய்யுமாறு பிரதமர் டேவிட் கமரூனிடம் கோருவதாகத் தெரிவித்துள்ளார்.
நிரந்தர அரசியல் தீர்வுத் திட்டமொன்றை எட்டுவதற்கான முதல் கட்ட நடவடிக்கையாக சர்வதேச விசாரணைகளை கருதுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
















