அகதிகளின் வருகையை தடுக்கவே நடுக்கடலில் வைத்து விசாரணை!: ஆஸி.பிரதமர்

Tony-Abbottநாட்டுக்குள் சட்டவிரோத அகதிகள் வருவதை தடுப்பதற்காகவே 157 இலங்கை அகதிகளையும் நடுக்கடலில் தடுத்து வைத்து விசாரணை செய்ததாக அவுஸ்திரேலிய பிரதமர் டொனி அபாட் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை தாம் ஏற்கப்போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் சர்வதேச மற்றும் தமது நாட்டு சட்டமுறைகளின் அடிப்படையிலேயே இந்த படகு அகதிகள் விடயத்தை அணுகுவதாக அபோட் இன்று ஊடகவியலாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.

நடுக்கடலில் தடுக்கப்பட்ட படகில் இருந்த 157 பேரில் பெரும்பாலானோர் இலங்கை தமிழர்களாக இருக்கலாம்.தற்போது கென்பராவுக்கு அழைத்து வரப்படும் அவர்கள் அங்கு தங்கவைக்கப்படுவர் என்று அபோட் கூறினார்.

மனித கடத்தல்காரர்களால் அவுஸ்திரேலியாவுக்கு படகுகள் மூலம் அழைத்து வரப்படும் அகதிகள் தாம் சட்டவிரோதமாகவே அழைத்து வரப்படுவதை உணர வேண்டும்.

இந்த நிலையில் படகுகள் மூலம் சட்டவிரோதமாக வரும் எவரும் அவுஸ்திரேலியாவில் நிரந்தரமாக தங்க வைக்கப்படமாட்டார்கள் என்றும் அபோட் குறிப்பிட்டார்.

மேலும் கடந்த செப்ரெம்பரில் பதவிக்கு வந்த அபோட் அகதி படகுகளை நிறுத்தப்போவதாக உறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: , ,

Leave a Reply