ரஷ்யாவில் உள்ள ஒரு நபர் தனது மோட்டார் சைக்கிளை திருடர்களிடம் இருந்து பாதுக்காக்க தனது மூன்றாவது மாடியில் உள்ள பால்கனியில் வின்ச் மூலம் ஏற்றி தினமும் நிறுத்தி வைக்கின்றார். ஏற்கனவே இரண்டு மோட்டார் சைக்கிள் திருடு போய்விட்டதாகவும், மூன்றாவது மோட்டார் சைக்கிளையும் தான் இழக்க விரும்பாததால், இந்த ஏற்பாடு செய்திருப்பதாகவும் அவர் கூறினார்.
மேற்கு ரஷ்யாவில் உள்ள Nizhny Novgorod என்ற பகுதியை சேர்ந்த 56 வயது Farihov என்பவர் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் மூன்றாவது மாடியில் குடியிருக்கின்றார். இவரிடம் ஒரு மோட்டார் சைக்கிள் உள்ளது. இந்த மோட்டார் சைக்கிளை இவர் திருடர்களிடம் இருந்து பாதுகாக்க மோட்டார் மூலம் இயங்கும் ஒரு சிறிய வின்ச் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார். தினமும் வீட்டிற்கு வந்ததும் வின்ச் மூலம் தனது மோட்டார் சைக்கிளை மூன்றாவது மாடியில் உள்ள பால்கனியில் தனது மோட்டார் சைக்கிளை ஏற்றி வைத்துக்கொள்கிறார். இதன்மூலம் தனது மோட்டார் சைக்கிள் திருடர்களிடம் இருந்து தான் பாதுகாப்பதாக கூறியுள்ளார்.
முதன்முதலாக தான் வாங்கிய மோட்டார் சைக்கிளை மூன்று பூட்டுகள் போட்டு வைத்திருந்தும் திருடர்கள் திருடிவிட்டதாகவும், இரண்டாவது வாங்கிய மோட்டார் சைக்கிளை வாங்கிய முதல் நாள் இரவே திருடு போய்விட்டதாகவும் சோகத்துடன் கூறிய Farihov, மூன்றாவது மோட்டார் சைக்கிளையும் திருடு போகாமல் பாதுகாக்கவே இந்த ஏற்பாடு செய்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
















