ஸ்மார்ட் கடிகாரங்களைப் போன்று அணியக்கூடியதும், தன்னகத்தே பல்வேறு வசதிகளைக் கொண்டதுமான சாதனமே Android Wear ஆகும்.
இச்சாதனம் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து பல்வேறு அப்பிளிக்கேஷன்கள் இச்சாதனத்திற்காக அறிமுகமாகிக்கொண்டிருக்கின்றன.
கூகுளின் அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட Android Wear சாதனத்திற்கு தற்போது Wear Internet Browser எனும் புதிய அப்பிளிக்கேஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
1.6 அங்குல அளவுடைய திரையினைக் கொண்ட இச்சாதனம் மூலம் இணைய உலாவலில் ஈடுபடுவதற்கு Wear Internet Browser அப்பிளிக்கேஷன் பயன்படுகின்றது.
















