ஆப்பிள் ஐ-போனுக்காக 14 தடவை சிங்களவனை கத்தியால் குத்திய பிரித்தானிய நபர் !

murderஇலங்கையில் இருந்து நல்ல வாழ்க்கை ஒன்றை தேடி பிரித்தானியாவுக்கு வந்த தவிஷ் பீரிஸ் என்னும் நபர் கொலை தொடர்பாக நாம் அறிந்திருப்போம். தான் படித்த படிப்புக்கு வேலை கிடைக்கவில்லை என்பதனால், டொமீனோஸ் பீட்சாவில் அவர் வேலைபார்த்து வந்துள்ளார். 2012 நவம்பர் மாதம் அவர் கத்தியால் குத்தபட்டு கொலைசெய்யப்பட்டார். பொலிசார் இக்கொலை தொடர்பாக 2 பேரைக் கைதுசெய்தார்கள்.

இவர்களில் காசீம் அகமெட் என்னும் நபருக்கு 17 வயதே ஆகிறது. அவர் 14 வயதில் இருந்து பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார் என்ற விடையத்தை பொலிசார் பின்னரே அறிந்துள்ளார்கள். இது இவ்வாறு இருக்க, காசிம் அகமெட்டின் மைத்துனரும் கொலையோடு சம்பந்தப்பட்டு உள்ளதால் அவரும் கைதாகியுள்ளார். இவர்களின் குடும்பத்தார் தெரிவிக்கையில், இவர்கள் இருவரும் இயற்கையாகவே கொலைசெய்யும் மனப்பண்மை உடையவர்கள் என்று தெரிவித்துள்ளார்கள்.

இயற்கையாகவே பாட்டு பாட முடியும், இயற்கையாகவே நாட்டியமாட முடியும் என்று சொல்லுவதைப் போல இயற்கையாவே இவர்கள் ஒரு ஆளை கொல்ல பிறந்தவர்கள் என்று இவரது குடும்பத்தார்கள் சொல்லியுள்ளார்கள். பணம், நகை, பொருட்களுக்காக இவர்கள் கொலைசெய்யவும் தயங்கமாட்டார்கள்.

சம்பவ தினத்தன்று, தவிஷ பீரிஸ் பீட்சாவை கொண்டு சென்று ஒரு வீட்டில் கொடுத்துவிட்டு திரும்பிக்கொண்டு இருந்தவேளை அவர் கைகளில் ஆப்பிள் ஐ போன் இருப்பதை இவ்விருவரும் அவதானித்துள்ளார்கள். தவிஷ பீரிசை சுமார் 14 தடவை கத்தியால் குத்திவிட்டு அவரது ஐ-போனை பறித்துச் சென்றுள்ளார்கள். அவர் வைத்திருந்த பணத்திற்காக இக் கொலை நடைபெறவில்லை. வெறும் ஐ போனுக்காக நடந்துள்ளது. மேலும் இந்த 2 நபர்களுக்கும் 23 வருட சிறைத்தண்டனை வழங்கி நீதிபதி தீர்பழித்துள்ளார்.

Tags: , ,

Leave a Reply