சல்மான்கானின் கிக் படத்தில் என்னை நடிக்க அழைக்க போது குத்தாட்டம் ஆடுவதற்காகத்தான் அழைக்கின்றார்கள் என்று நினைத்து போனேன். ஆனால் நான் தான் ஹீரோயின் என கிக் இயக்குனர் சாஜித்கான் கூறியபோது இன்ப அதிர்ச்சியில் உறைந்தேன் என பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னண்டஸ் கூறியுள்ளார்.
கடந்த வாரம் ரிலீஸான சல்மான்கானின் கிக் திரைப்படம் நாடு முழுவதும் பெரும் வரவேற்போடு தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த படத்தில் சல்மான்கானின் ஜோடியாக நடித்திருக்கும் ஜாக்குலின், இதனால் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
இந்த படத்தில் நடித்தபோது சல்மான்கானுடன் ஜாக்குலின் நெருங்கிய தொடர்பில் இருந்தார் என்றும், அதன் காரணமாக சல்மான்கான் அவருக்கு ஒரு புதிய வீட்டை பரிசாக கொடுத்தார் என்றும் கிசுகிசுக்கள் வெளிவந்தன. இதுகுறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ஜாக்குலின், ” நான் பல திரைப்படங்களில் நடித்து சேர்த்து வைத்த பணத்தில் இப்போதுதான் ஒரு புதிய கார் வாங்கிய்ள்ளேன். எனக்கு சொந்த வீடு என்பதெல்லம் வெறு கனவுதான். சல்மான் கான் வீடு கொடுத்தார் என்பது போன்ற புரளிகள் என் கடின உழைப்பைக் கேலி செய்வதாக உள்ளது.. ‘இதுபோன்று வரும் கிசுகிசுக்கள் எனக்கு எரிச்சலை ஏற்படுத்துகின்றன என்று கூறினார்.
கிக் படத்தின் வெற்றியை அடுத்து ரன்பீர் கபூர் மற்றும் அர்ஜூன் ராம்பல் ஆகியோர்களின் படத்தில் நடிப்பதாகவும், ஒரு படத்தில் தனக்கு திரைப்படத்தயாரிப்பாளர் வேடம் என்றும் ஜாக்குலின் கூறினார்
















