ராஜபக்சே மீது இலங்கை சட்ட அமைச்சர் கடும் விமர்சனம்!

rauf-hakeemஇலங்கை சட்ட அமைச்சர் ரவூப் ஹக்கீம், அதிபர் ராஜபக்சவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளது ஆட்சியாளர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சவூதி அரேபியா சென்றுள்ள இலங்கை சட்ட அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் கல்முனை நகரசபை மேயர், கிழக்கு மாகாண முஸ்லிம் காங்கிரஸ் தொகுதி அமைப்பாளர்கள் உள்ளிட்ட சிலர் சவூதி அரேபியா சென்றுள்ளனர்.

அங்கு இஸ்லாமிய அமைப்புக்களை சந்தித்துள்ள அமைச்சர் ஹக்கீம், அளுத்கம பேருவளை சம்பவம், பொதுபல சேனா அமைப்பின் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக அதிபர் ராஜபக்சேவை விமர்சனம் செய்துள்ளார்.

இந்த பிரச்னைகளுக்கு அரசும், அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்களுமே காரணம் என்பது புலனாகியுள்ளது. தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சி தொடபாக அவர் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

அமைச்சர் ஹக்கீம் விமர்சனம் தொடர்பாக அதிபர் ராஜபக்சேவுக்கு தகவல் கிடைத்துள்ளது.இதனையடுத்து, குறித்த அமைப்பினரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஹக்கீமின் முறைப்பாடுகள் பொய்யானவை என அதிபர் தெரிவித்துள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Tags: , ,

Leave a Reply