கமல்ஹாசனின் கர்ப்பிணி மனைவி. ஊர்வசியின் அதிர்ச்சி தகவல்.

kamalhassan-urvashi-pregnancyகமல்ஹாசன் இருவேடங்களில் நடித்த ‘உத்தம வில்லன்’ படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து நடிகை ஊர்வசி மனம் திறந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அந்த ஒரு நிமிடம், மைக்கேல் மதனகாமராஜன், பஞ்சதந்திரம் ஆகிய படங்களில் ஏற்கனவே கமல்ஹாசனுடன் ஜோடியாக நடித்துள்ள ஊர்வசி, இந்த படத்தில் கமல்ஹாசனுக்கு மனைவியாக நடித்துள்ளாராம். இந்த படத்தில் அவருடன் இணைந்து காமெடி கேரக்டர் செய்யவில்லை என்றாலும், தங்கள் இருவரின் கேரக்டர்களும் நகைச்சுவை உணர்வு அதிகம் உள்ள கேரக்டர்களாக இருக்கும். ரசிகர்களுக்கு தங்கள் நகைச்சுவை உணர்வு ஒரு புதுவித அனுபவமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

கமல்ஹாசன் மனைவியாகவும், கர்ப்பிணியாகவும் இந்த படத்தில் நடிக்கும்போது, தான் உண்மையிலேயே கர்ப்பம் அடைந்ததாகவும், கர்ப்பிணியாக இருந்துகொண்டே கர்ப்பிணி வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு கொடுத்த கமல்ஹாசனுக்கு தான் நன்றி கூறிக்கொள்வதாகவும் அவர் மேலும் கூறினார்.

Tags: , ,

Leave a Reply