நித்தியானந்தாவைக் கைது செய்து ஆண்மைப் பரிசோதனை நடத்துங்க – கர்நாடக கோர்ட் அதிரடி உத்தரவு!

nithyananda--4-600ஆண்மை பரிசோதனை செய்ய போலீஸாரிடம் ஆஜராகாத நித்தியானந்தாவை கைது செய்ய கர்நாடக மாநில ராம்நகர் நீதிமன்றம் இன்று அதிரடியாக பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் பெங்களூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் ஆன்மீக ஆசிரமம் ஒன்றை நித்தியானந்தா கடந்த சில வருடங்களாக நடத்தி வருகிறார். இவரது ஆசிரமத்தில் நடிகை ரஞ்சிதா உள்பட ஏராளமான பெண்களும் உள்ளனர். இந்நிலையில் அவரது ஆசிரமத்தில் தங்கியிருக்கும் பெண்களை அவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக எழுந்த புகாரினை அடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு கர்நாடக போலீசார் அவரை கைது செய்தனர். தற்போது ஜாமீனில் இருக்கும் அவருக்கு ஆண்மை பரிசோதனை நடத்த காவல்துறையினர் முடிவு செய்தனர்.

ஆனால் ஆண்மை பரிசோதனை நடத்த தடை விதிக்க வேண்டும் என பெங்களூர் உயர்நீதிமன்றத்தில் நித்தியானந்தா மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரணை செய்த உயர்நீதிமன்ற நீதிபதி ஜூலை 18ஆம் தேதி கர்நாடக போலீஸார் நித்தியானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை செய்யலாம் என அனுமதி கொடுத்தார். ஆனால் கடந்த 18ஆம் தேதி நித்தியானந்தா போலீஸாரிடம் ஆஜராகவில்லை. இதையடுத்து ஆண்மை பரிசோதனைக்கு ஆஜராகாத நித்தியானந்தாவை கைது செய்ய இன்று ராம்நகர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் நித்தியானந்தா ஆசிரமத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags: , ,

Leave a Reply