குடிகாரரின் உயிரைக் காப்பாற்றிய ஸ்மார்ட்போன். சீனாவில் அதிசய சம்பவம்.

smartphone-save-gunshot-chinaசீனாவில் உள்ள ஒரு மதுபாரில் குடிபோதையில் துப்பாக்கியால் சுட்ட ஒருவரின் உயிரை செல்போன் காப்பாற்றியுள்ளது.

சீனாவை சேர்ந்த 47 வயது Han Peng என்பவர் தனது நண்பர்களுடன் Hsinchu, Taiwan என்ற நகரில் உள்ள மதுபாரில் மதுவகைகளை குடித்துக்கொண்டிருந்தார். அப்போது அவருடைய நண்பர் 48 வயது Hsu Shen என்பவருக்கும் அவருக்கும் இடையே மதுவை பரிமாறியதில் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த Han Peng தனக்கு எதிரில் உட்கார்ந்திருந்த நண்பரை துப்பாக்கியால் சுட்டார். குண்டு மிகச்சரியாக அவரது இதயம் இருந்த பகுதியில் தாக்கியது. ஆனால் அவருக்கு சிறிய காயம் கூட ஏற்படவில்லை. காரணம் அவர் சுட்ட இடத்தில் இருந்த சட்டைப்பையில் அவர் தனது செல்போனை வைத்திருந்தார். அவருக்கு சிறுகாயம் கூட இன்றி உயிர் தப்பினாலும், அவருடைய செல்போன் முற்றிலும் சேதமடைந்துவிட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த மதுபார் உரிமையாளர் உடனடியாக போலீஸை அழைக்க முயற்சி செய்தார். ஆனால் துப்பாக்கி குண்டுக்கு இலக்கானவரே அவரிடம் வந்து தங்கள் நண்பர் குடிபோதையில் தெரியாமல் செய்துவிட்டதாகவும், இதை கண்டுகொள்ள வேண்டாம் என்றும் கூறியதால் மதுபார் உரிமையாளர் அவர்கள் அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டார். தனது உயிரை காப்பாற்றிய செல்போனை தான் கடைசிவரை ஜாக்கிரதையாக பாதுகாத்து வைக்க அவர் முடிவு செய்துள்ளதாக அவருடைய நண்பர்கள் கூறுகின்றனர்.

Tags: , ,

Leave a Reply