கவுதமி விட்டுக்கொடுத்தால் கமலுக்கு ஜோடியாக தயார். ஸ்ரீதேவி அதிர்ச்சி தகவல்.

kamal-sridevi-dryshyam-remakeமோகன்லால் மீனா நடித்து மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற த்ரிஷ்யம் ரீமேக் தமிழ் படத்தில் நடிக்க ஸ்ரீதேவி மறுத்துவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

த்ரிஷ்யம் தமிழ் ரீமேக் படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் ஆரம்பிக்க இருக்கும் நிலையில் இந்த படத்தின் முக்கிய கேரக்டரான போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்க நடிகை ஸ்ரீதேவியை படத்தின் இயக்குனர் ஜீத்து ஜோசப் அணுகினார். முதலில் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்த ஸ்ரீதேவி, பின்னர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் கமல்ஹாசன் படத்தில் நடிப்பது தனக்கு ஒரு நல்ல வாய்ப்பாக இருந்தாலும், அந்த படத்தில் இடம்பெற்றுள்ள போலீஸ் அதிகாரி வேடம் தனக்கு பொருந்துமா? என்று சந்தேகமாக இருந்ததால் மறுத்துவிட்டதாகவும், தான் அந்த படத்தில் மீனா கேரக்டரில் கமலுக்கு ஜோடியாக நடிக்க ஆசைப்பட்டதாகவும், ஆனால் அந்த கேரக்டரை கவுதமி விட்டுக்கொடுக்க தயாராக இல்லாததால், தான் அந்த படத்தில் இருந்து விலகுவதாகவும் தெரிவித்தார். ஒருவேளை கவுதமி மனம் மாறி, அந்த கேரக்டரை விட்டுக்கொடுத்தால் மீனா கேரக்டரில் நடிக்க ஆர்வமுடன் இருப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Tags: , ,

Leave a Reply