92 வயது மூதாட்டியை கற்பழித்த காமக் கொடூரன்

sexual-abuse10உத்தர பிரதேசத்தில் 92 வயது மூதாட்டியை 26 வயது இளைஞர் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றம் உறுதி செய்யப்பட்டது.

உத்தரபிரதேச மாநிலம் ஷாமிலி மாவட்டம் கண்தலா என்ற பகுதியில் வசித்த 92 வயது மூதாட்டியை கடந்த 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி அன்று 26 வயதுடைய மன்ட்டு என்ற இளைஞன் கற்பழித்தார்.

இதனையடுத்து கற்பழிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட அந்த இளைஞனை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. மருத்துவ அறிக்கையில் அவர் கற்பழிப்பில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. மூதாட்டியும் தனது வாக்குமூலத்தில் மன்ட்டு என்ற அந்த இளைஞன் தன்னை கற்பழித்ததாக கூறினார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நடந்த விசாரணையில் மன்ட்டு கற்பழிப்பு குற்றத்தில் ஈடுபட்டதாக நீதிமன்றம் உறுதி செய்தது. அவருக்கான தண்டனை விவரம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு வருவதற்கு முன்னதாகவே கற்பழிக்கப்பட்ட அந்த மூதாட்டி இறந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: ,

Leave a Reply