வேலையில்லா பட்டதாரி தறிகெட்டு ஓடுகிறது. அதேபோல் படம் குறித்த குற்றச்சாட்டுகளும்.
படம் நெடுக தனுஷ் சிகரெட்டை ஊதித் தள்ளுகிறார். போஸ்டரிலும் ஊதுகிறார். இதை எப்படி தணிக்கைக்குழு அனுமதித்து யு சான்றிதழ் தந்தது என்று புகையிலைக்கு எதிரான இயக்கம் புகார் தந்துள்ளது. போலீஸ் கமிஷனிடம் தந்த புகாருக்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்துள்ளார். இந்நிலையில் படம் குறித்து மற்றுமொரு புகார்.
வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷ் வெட்டி ஆபிசர். அவரது தம்பியோ கை நிறைய சம்பளம் வாங்கும் ஐடி ஊழியர். அப்பா சதா தனுஷை கரித்துக் கொட்ட, ஒரு சந்தர்ப்பத்தில், தம்பியை மாதிரி என்னை செயின்ட் ஜோன்ஸ் பள்ளியிலா படிக்க வச்சீங்க? ராமகிருஷ்ணா மிஷன்லதானே படிக்க வச்சீங்க. அங்க படிச்சதுனால சரளமாக இங்கிலீஷ் பேச முடியலை, வேலையும் கிடைக்கலை என்று கூறுவார்.
















