உள்ளக விசாரணை மற்றும் ஐ.நா விசாரணைகளின் போது விடுதலைப்புலிகளுக்கு எதிராக பொய்ச் சாட்சி சொல்பவர்களுக்கு வீடு கட்டிக்கொடுக்கும் நடவடிக்கையில் சிறிலங்காப் படைத்தரப்பு ஈடுபட்டுள்ளது.
கோத்தபாய தயாரித்த ஆவணப்படத்தில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக பொய்ச் சாட்சி சொன்ன வட்டக்கச்சியை சேர்ந்த ஜெயவதனி என்பருவக்கு சிறிலங்காப் படையினர் வீடொன்றை வழங்கியுள்ளனர்.
இதே வேளை திருகோணமலையில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக சாட்சி சொல்பவர்களுக்கு இரண்டு லட்சம் ரூபா வழங்கப்படும் என ஒட்டுக்குழு கருணா அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக தெரியவருகின்றது.
தமிழ் மக்களை விலைக்கு வாங்கி தனது போர்க்குற்ங்களையும் இன அழிப்பையும் மூடி மறைக்க சிறிலங்காப் படைத்தரப்பு கடும் முயற்சி மேற்கொண்டுள்ளமை குறிப்பிடதக்கது.
















