பெண்கள் பாடசாலைக்குள் புகுந்த நமாலின் மன்மத லீலை வெளிச்சத்தில்…

namal-girlsநாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பல்வேறு வேலைத்திட்டங்களை பயன்படுத்தியும், அதிகார பலத்தை கொண்டும் முன்னணி பெண்கள் பாடசாலைகளுக்குள் நுழையும் காரணம் வெளிவந்து கொண்டிருப்பதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.

நாமல் ராஜபக்ஷவின் இந்த வேலைத்திட்டம் குறித்து ஆசிரியர்களும் பெற்றோரும் உன்னிப்பாக கவனம் செலுத்தி வருவதாக அதில் கூறப்பட்டுள்ளது.

பிரபல தொலைக்காட்சி தொடர் நாடக இயக்குனரின் புதல்வியை திருமணம் செய்வதாக வாக்குறுதியளித்து விட்டு, பின்னர் அந்த யுவதிகளை கைவிட்ட நிலையில், பெண்கள் பாடசாலைகளுக்குள் செல்வதில் நோக்கங்கள் இருக்கலாம் என அவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க பாலிகா கல்லூரிக்குள் நேற்று சிங்கள பாடகர் ஒருவருடன் திடீரென சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, மாணவிகளுடன் நடனமாட முயற்சித்தமை இந்த சந்தேகத்தை மேலும் வலுவடைய செய்துள்ளதாக அந்த சிங்கள இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது. இதற்கு முன்னர் கொழும்பில் உள்ள மற்றுமொரு பிரபல பெண்கள் பாடசாலையான விஸாகா கல்லூரிக்கும் நாமல், குறித்த சிங்கள பாடகருடன் சென்றிருந்தாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும் சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரி மாணவிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட குழுவினர் பாடசாலையில் இருந்து வெளியேறிச் சென்றுள்ளனர்.

Tags: , ,

Leave a Reply