தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக சிறீலங்கா அரசாங்கம் போர்க்குற்றச் செயல் விசாரணைகளை நடாத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட போர்ககுற்றச் செயல்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டபைமப்பினர் உடந்தையாக செயற்பட்டனர் என்ற அடிப்படையில் விசாரணைகளை நடாத்த நேரிடும் என சிறீலங்கா அறிவித்துள்ளது.
சிறீலங்கா அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய நாடுகள் பிரதிநிதிகளினால் நடாத்தப்படும் சர்வதேச விசாரணைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சாட்சியமளித்தால், இவ்வாறு விசாரணை நடத்தப்படும் என அரசாங்கம் எச்சரித்துள்ளது.
















