செலவு15 கோடி… வரவு…25 கோடி – வசூல் சாதனை படைக்கும் வேலையில்லா பட்டதாரி

dhanush-amalapaulநீதானே என் பொன்வசந்தம் தவிர, விண்ணைத்தாண்டி வருவாயா தொடங்கி எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் பட நிறுவனத்தின் தயாரிப்பாளரான பி.மதன் தயாரித்த படங்கள் அனைத்துமே மிகப்பெரிய வெற்றிப்படங்கள்தான்.

குறிப்பாக, சிவகார்த்திகேயனை வைத்து இவர் தயாரித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் வசூலில் சரித்திர சாதனை செய்த படம்.

அடுத்து தயாரித்த, மான் கராத்தே படமும் மதனுக்கு ஜாக்பாட் ஆக அமைந்தது.

மான்கராத்தே படத்தை அடுத்து தற்போது பிரபுசாலமன் இயக்கும் கயல் படத்தை பிரம்மாண்டமாகத் தயாரித்து வருகிறார் மதன்.

இந்த இடைவெளியில் தனுஷ் தயாரித்து நடித்த வேலையில்லா பட்டதாரி படத்தின் தமிழக உரிமையை வாங்கினார் மதன்.

அந்தப் படத்துக்கு பிரம்மாண்டமானமுறையில் விளம்பரங்களை செய்து வேலையில்லா பட்டதாரி படத்தை தமிழகம் முழுக்க ரிலீஸ் செய்தார்.

கடந்த சில வருடங்களாக தொடர்ந்து தோல்விப்படங்களைக் கொடுத்து வருகிறார் தனுஷ்.

எனவே அவர் நடித்த வேலையில்லா பட்டதாரி படத்துக்கு மதன் இத்தனை கோடிகளை வாரி இறைத்து விளம்பரம் செய்கிறாரே என்று திரையுலகில் பலரும் கேலி பேசினார்கள்.

அது மட்டுமல்ல, வேலையில்லா பட்டதாரி படத்தை வாங்கிய மதனுக்கு நிச்சயம் நஷ்டம் ஏற்படும் என்றெல்லாம் ஜோதிடம் கூறி வந்தனர்.

ஆனால் அனைவரது கணிப்பையும் மீறி வேலையில்லா பட்டதாரி படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது.

குறிப்பாக செங்கல்பட்டு ஏரியாவில் வசூலை குவித்துக் கொண்டிருக்கிறது.

வேலையில்லா பட்டதாரி படத்துக்குப் பிறகு பல படங்கள் வெளியானநிலையிலும் சென்னையில் உள்ள அனைத்து மல்ட்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் அதிக ஸ்கிரீன்களில் திரையிடப்பட்டிருப்பது வேலையில்லா பட்டதாரி படம்தான்.

இந்த வாரம் வெளியான சரபம், ஜிகர்தண்டா படங்களோ குறைவான ஸ்கிரீன்களில் மட்டுமே திரையிடப்பட்டுள்ளன.

தனுஷிடமிருந்து 12 கோடிக்கு வாங்கப்பட்ட வேலையில்லா பட்டதாரி படத்துக்கு 3 கோடிக்கு மேல் பப்ளிசிட்டி செய்துள்ளார் மதன். ஆக செலவு 15 கோடி.

இதுவரை 25 கோடி வசூல் செய்திருக்கிறதாம். ஆக..வரவு..25 கோடி.

Tags: ,

Leave a Reply