விசமிகளுடன் தமிழ் இணையமும் சேர்ந்து லைக்கா மொபைல் நிறுவனத்தின் மீது பொய் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். தமிழரின் ஊடகம் என்று ஈழ மக்கள் மத்தியில் தம்மை அடையாளபடுத்தி வரும் ஒரு ஊடகம் சிங்கள அரசுடன் கைகோர்த்து தமிழ் மக்களுக்கு எதிரான செயட்ப்படுகளை மறைமுகமாகவும் நயவஞ்சக தனத்துடனும் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.அவ்வாறான செயல்களை மூடி மறைக்கும் முகமாக தமிழர்களுக்கு அடையாளமாக இருந்து வரும் ஈழதமிழரின் பாரிய நிறுவனங்களையும் அவர்களது செயட்படுகளையும் தமிழ் மக்களின் மனதில் எதிர்மறையான எண்ணங்களை உருவாக்கும் முகமாக லைக்கா மொபைல் போன்றசர்வதேச அளவில் தமிழரின் அடையாளமாக விளங்கும் பாரிய இந்த நிறுவனத்துக்கு எதிராக பொய் பிரசாரங்களை தமது மறைமுக வியாபார நோக்கோடு சிங்கள பேரினவாத அரசுடன் இணைந்து செயற்படுகின்றனர்.இது தமிழரின் பொருளாதார வளத்தின் இஸ்தர தன்மையையும் சர்வதேச அளவில் அவர்களுக்கு இடையே உள்ள நம்பகத்தன்மை மற்றும் ஒற்றுமை போன்றவற்றை சீர்குலைப்பதன் முலம் அவர்களை பிரித்தாளும் புலனாய்வு தந்துரோபயம் ஆகும்.தயவு செய்து ஈழ மக்கள் அனைவரும் இவ்வாறான பொய் பிரசாரங்களை நம்ப வேண்டாம் என்று தமிழ் ஊடகங்கள் சார்பாக கேட்டுகொள்கின்றோம்.
முக்கிய குறிப்பு மேற்படி இணையம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமது இணையம் ஈழத்தில் அவதியுரும் ஈழ மக்களுக்கு 14 மில்லியன் உதவ முன்வந்துள்ளதாக செய்தியை வெளியிட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.ஆனாலும் நடந்தது என்ன ?இவ்வாறான பொய் பிரசாரங்களை பிரசுரிக்கும் இவ்விணையத்தை மக்கள் நன்றாக அறிந்திருக்க வேண்டும்.
குறிப்பிட்ட லைக்கா மொபைல் நிறுவனத்தால் பல மில்லியன் ரூபாய் மதிப்பில் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு நேரடியாக ஞானம் அறக்கட்டளை மூலம் வழங்கி இருந்தமை குறிப்பிட தக்கது.

























