சிறீலங்கா தூதரை நேரில் வரவழைத்து இந்தியா கண்டனம்!

srilanka-indiaதமிழக முதல்வர் ஜெயலலிதா பற்றி அவதூறான கட்டுரை சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சு இணையத்தளத்தில் வெளியிட்டமையினை சிறீலங்கா தூதரை நேரில் வரவழைத்து இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

அ.தி.மு.க.வின்கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு இலங்கை தூதரை நேரில் அழைத்து, முதல்-அமைச்சர் ஜெயலலிதா பற்றி அவதூறான கட்டுரை வெளியிட்டதற்காக கண்டனம் தெரிவித்தது.

சிறீலங்கா கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் போதும், கைது செய்யப்படும் போதும் அதை வன்மையாக கண்டிக்கும் முதல்- அமைச்சர் ஜெயலலிதா, இதை மத்திய அரசு தடுத்து நிறுத்தக்கோரி அவ்வப்போது பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதங்களும் எழுதி வருகிறார்.

இதைத்தொடர்ந்து, வெளியுறவுத்துறை அமைச்சகம் டெல்லியில் உள்ள சிறீலங்கா தூதர் சுதர்சன் சேனவிரத்னேயை நேரில் அழைத்தது.

வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் சிறீலங்கா விவகாரங் களை கவனிக்கும் இணைச் செயலாளர், அவதூறு கட்டுரை தொடர்பாக பாராளு மன்றத்தில் உறுப்பினர்கள் வெளிப்படுத்திய கோபத்தையும் கவலையும் சுதர்சன் சேனவிரத்னேயிடம் எடுத்துக்கூறி இந்தியாவின் கண்டனத்தை தெரிவித்தாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Tags: , ,

Leave a Reply