தண்ணீரில் நனையாத டீ-சர்ட். ஆஸ்திரேலிய நிறுவனம் சாதனை.

water-t-shirtஆஸ்திரேலிய நிபுணர்கள் 100% காட்டன் துணியில் அதே நேரத்தில் தண்ணீரில் நனையாத டி.சர்ட்டுக்களை தயாரித்து சாதனை புரிந்துள்ளனர்.

ஆஸ்திரேலிய நாட்டின் மெல்போன்ர் நகரை சேர்ந்த Melbourne clothing and technology label Threadsmiths என்ற நிறுவனம் வாட்டர் புரூப் என்று சொல்லக்கூடிய தண்ணீரில் நனையாத அதே நேரத்தில் பாதுகாப்புள்ள டீ-சர்ட்டுக்களை கண்டுபிடித்துள்ளனர். முழுக்க முழுக்க காட்டன் நூலால் ஆன இந்த் டீசர்ட்டில் எவ்வித உடலை தீங்கு செய்யும் கெமிக்கல் கலப்பின்றி இந்த டீ-சர்ட்டினை வடிவமைத்ததாக கூறப்படுகிறது.

தாமரை இலையில் தண்ணீர் பட்டால் எப்படி அந்த இலையில் ஒட்டாமல் இருக்குமோ அதுபோல இந்த டீ-சர்ட்டில் தண்ணீர் பட்டால் ஒட்டாது. தாமரை இலையில் இயற்கைத்தன்மையை கண்டுபிடித்து அதே கான்செப்ட்டில் இந்த டீ-சர்ட்ட் கண்டுபிடிக்கப்பட்டதாக இந்த நிறுவனம் கூறியுள்ளது. தண்ணீர் மட்டுமல்ல இந்த டீ-சர்ட்டில் அழுக்கும் படாது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த டீ-சர்ட்டின் விலை $65 என்றும் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலரும் அணியும் வகையான டீ-சர்ட்டுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், குழந்தைகளுக்கு மிக விரைவில் தயாரிக்கப்பட உள்ளதாகவும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tags: ,

Leave a Reply