‘தல 55′ சீக்ரெட் : கெளதம்மேனன் ஆசையை நிறைவேற்றிய அஜித்!

ajith5‘வீரம்’ படத்தைத் தொடர்ந்து அஜித்தின் அடுத்த படத்தை கெளதம்மேனன் டைரக்ட் செய்து வருகிறார்.

டைட்டில் உட்பட பல விஷயங்கள் சீக்ரெட்டாக இருந்தாலும் அவ்வப்போது படத்தைப் பற்றிய தகவல்களும் அரசல் புரசலாக வந்து கொண்டுதானிருக்கின்றன.

முன்னதாக ‘அசல்’ படத்தில் சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலுடன் தோன்றினார் அஜித். அந்தக் கெட்டப் ரசிகர்களிடையே பாப்புலரானதைத் தொடர்ந்து நான்கைந்து படங்களில் அதே கெட்டப்பில் வந்தார்.

ஆனால் கெளதம் மேனன் படத்தில் அந்த ஹேர்ஸ்டைலுக்கு அஜித் குட்பை சொல்லப் போகிறார் என்று தான் சொன்னார்கள். ஆனால் உண்மை அப்படியில்லையாம்.

இந்தப் படத்திலும் அதே சால்ட் அண்ட் பேப்பர் ஹேர் ஸ்டைலுடன் தான் வருகிறார் அஜித்.

படத்தில் உள்ள ப்ளாஸ்பேக் காட்சிகளில் மட்டும் அவர் கேரக்டர் யூத் என்பதால் கருத்த தலைமுடியுடன் வருகிறார். அதுபோக உங்களை ரொம்ப யூத்தா இந்தப்படத்துல காட்ட ஆசைப்படுறேன். அதனால நீங்க கொஞ்சம் வெயிட்டையும் கொறைக்கணும் என்றாராம்.

அவ்ளோதான் கெளதமின் வேண்டுகோளை ஏற்று ரெண்டே மாதத்தில் 10 கிலோ வரை உடம்பைக் குறைத்து ஸ்லிம்மாக காட்சியளிக்கிறாராம் அஜித்.

Tags: ,

Leave a Reply