சம்பளம் வாங்க மறுத்த நடிகையின் வீட்டுக்கு சென்று ஸ்பெஷலாக கவனித்த இயக்குனர்.

arya-amala-parthibanஇயக்குனர் பார்த்திபன் நீண்ட இடைவெளிக்கு பின்னர் இயக்கி வரும் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்” திரைப்படத்தில் ஆர்யா, அமலாபால், விஜய் சேதுபதி, விஷால், டாப்ஸி என ஒரு திரையுலக பட்டாளமே கவுரவ வேடத்தில் நடித்துள்ளனர். பார்த்திபன் எந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு கூப்பிட்டாலும் அந்த விழாவில் கலந்துகொண்டு படக்குழுவினர்களையும் அதில் நடித்த நடிகர் நடிகைகளையும் உற்சாகப்படுத்தி பேசுவார். அந்த நட்பு முறையில்தான் இந்த சினிமா பிரபலங்கள் அவருடைய படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்க சம்மதித்துள்ளனர்.

மேலும் கவுரவ வேடத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் அவரிடம் சம்பளம் பெற மறுத்துவிட்டார்களாம். பார்த்திபன் வலிய போய் சம்பளத்தை கொடுத்தாலும் யாருமே வாங்கிக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பார்த்திபன் படத்தில் தாங்கள் நட்புக்காகத்தான் நடித்ததாகவும், பணம் சம்பாதிக்க தங்களுக்கு எத்தனையோ படங்கள் இருக்கின்றது என்று கூறி மறுத்துவிட்டனர்.

சம்பளம் வாங்க மறுத்த நடிகர், நடிகைகளின் வீட்டுக்கு சென்று விலையுயர்ந்த பரிசுகளை கொடுத்து பார்த்திபன் அசத்தி வருகிறார். பரிசுப்பொருட்களாக பார்த்திபன் கொடுத்ததை வாங்க மறுக்க முடியாமல் அவற்றை பெற்றுக்கொண்டு பார்த்திபனின் நல்ல உள்ளத்தை ஆர்யா, விஷால், அமலாபால் ஆகியோர் புகழ்ந்ததாக கூறப்படுகிறது. அமலாபால் புதியதாக திருமணமானவர் என்பதால் அவருக்கு மட்டும் ஸ்பெஷல் பரிசு கிடைத்ததாம். அது என்ன பரிசு என்பதை அமலாபால், பார்த்திபன் ஆகிய இருவருமே வெளியே கூற மறுக்கின்றனர்.

Tags: , , , ,

Leave a Reply