ஐ.நாவின் கோரிக்கையை உதாசீனம் செய்தது அரசாங்கம்

Sri_Lanka_flag3ஐக்கிய நாடுக்ள அமைப்பின் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் விடுத்த கோரிக்கையை அரசாங்கம் உதாசீனம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

இலங்கையில் அடைக்கலம் பெற்றுக்கொண்டுள்ள பாகிஸ்தானிய புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்த வேண்டாம் என இலங்கை அரசாங்கத்திடம், ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் கோரியிருந்தது.

எனினும், இந்தக் கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்து 36 பாகிஸ்தானிய புகலிடக் கோரிக்கையாளர்களை இலங்கை குடிவரவு குடியகழ்வு திணைக்களம் நாடு கடத்தியுள்ளது.

இரண்டு மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த குறி;த்த புகலிடக் கோரிக்கையாளர்கள் அண்மையல் நாடு கடத்தப்பட்டனர்.

நாடு கடத்தப்பட்ட பாகிஸ்தானியர்களில் அதிகமானவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தின் பேச்சாளர் அரியேன் ரமொரி தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும், இவர்களின் நிலைமை குறித்து கண்காணிக்கப்படக் கூடிய சாத்தியங்கள் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் புகலிடக் கோரிக்கையாளர்களின் நிலைமை ஆபத்தானதாகவே காணப்படுகின்றது என தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்ந்தும் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாகவும், புகலிடக் கோரிக்கையாளர்களை பராமரிப்பதில் சிரமங்கள் நிலவி வருவதாகவும் இலங்கை அரசாங்கம் அண்மையில் தெரிவித்திருந்தது.

Tags: , ,

Leave a Reply