சாட்சியமளிக்கும் விபரங்களை வெளியிட்டது ஐ.நா

un-flagஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் விசாரணைக்குழுவில் போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தமிழ், மற்றும் சிங்கள மொழியிலும் சாட்சியமளிக்கலாம் என ஐ.நா சபை தெரிவித்துள்ளது.

குற்றச்செயல் நடந்த காலம்: 21.02.2002 முதல் 15.11.2011 வரை. (இதனோடு தொடர்புடைய நிகழ்வுகள் அல்லது அதன் தொடர்ச்சி அதற்கு பின்னர் நடைபெற்றாலும் அது தொடர்பாகவும் முறைப்பாடுகள் தெரிவிக்கலாம்). 30.10.2014 க்கு முன் முறைப்பாடுகள் அனுப்பப்படவேண்டும்.

மின்னஞ்சல் மூலம் அனுப்பவேண்டிய முகவரி: OISL_submissions@ohchr.org

அஞ்சல் மூலம் அனுப்ப:
OISL
UNOG-OHCHR
8-14 Rue de la Paix
CH-1211 Geneva 10
Switzerland

புகார்கள் அனைத்தும் 10 பக்கங்களுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.

காணொலிகள், நிழற்படங்கள், ஒலிப்பதிவுகள் போன்ற வடிவில் ஆதாரங்களை அனுப்பி வைக்க விரும்புபவர்கள் முதலில் மின்னஞ்சல் மூலம் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயலகத்துடன் தொடர்பை ஏற்படுத்த வேண்டும் என்றும், அதன் பின்னர் சம்பந்தப்பட்ட ஆதாரங்களை உரியவர்கள் அனுப்புவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் செயலகம் அறிவித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் காணலாம் : OHCHR Investigation on Sri Lanka

http://www.ohchr.org/EN/HRBodies/HRC/Pages/OISL.aspx

Tags: ,

Leave a Reply