யோகேஸ்வரியின் ஆட்சி முடிவுக்கு வந்தது!!

yageswaryயாழ்ப்பாண மாநகரசபைத்தேர்தல் நடத்தப்பட்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சியமைத்து நாளை வெள்ளிக்கிழமையுடன் ஐந்து வருடங்கள் பூர்த்தியடையவுள்ளதால் தற்போதைய முதல்வர் யோகேஸ்வரி கும்பல் வீட்டிற்கு செல்லவுள்ளது. இதையடுத்து இம் மாதம் முடிவடைந்த பின்னர் ஆணையாளரின் கீழ் நிர்வாகம் இயங்கவுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

யுத்தம் முடிவடைந்த 2009 ஆம் ஆண்டு ஓகஸ்ட் எட்டாம் திகதி யாழ் மாநகர சபைத் தேர்தல் நடைபெற்றது. இதில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சியான ஈழமக்கள் ஐனநாயககக் கட்சி தலைமையிலான முதல்வருடன் ஆட்சி அமைக்கப்பட்டது.

மாநகர சபையின் ஆட்சிக் காலம் நான்கு வருடங்கள் ஆகும். இவ்வாறு அமைக்கப்பட்ட இந்த ஆட்சி கடந்த வருடம் ஓகஸ்ட் எட்டாம் திகதியுடன் நிறைவடைந்திருந்த நிலையில் அதிகாரத்தை பயன்படுத்தி மீண்டும் ஒரு வருட ஆட்சி நீடிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நீடிக்கப்பட்ட ஒரு வருட ஆட்சிக் காலமும் நிறைவடைய உள்ளது. அதாவது இந்த சபைக்குரிய தேர்தல் நiபெற்று நாளையுடன் நீடிக்கப்பட்ட ஒரு வருடம் உள்ளடங்கலாக ஐந்து வருடங்கள் நிறைவடையவுள்ளது.

அதே வேளையில் வர்த்தகமாணி அறிவித்தலின் பிரகாரம் இம் மாதம் 31 ஆம் தகதி வரை சபை கலைக்கப்படாதென்றும் அது வரையில் தமது ஆட்சியே நடைபெறுமென்றும் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்துள்ளார்.

இவ்வாறு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஆட்சி முடிவடைந்ததன் பின்னர் இதனைத் தொடர்ந்து வர்த்தக மாணி அறிவித்தல் வரும் வரையில் ஆனையாளரின் கீழேயே நிர்வாகம் செயற்படுமென்றும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆயினும் இதன்;போது ஆட்யாளர்களின் விருப்பத்திற்கமைய தமக்கு வேண்டியவர்களை நியமித்து விசேட ஆணையாளரின் கீழ் மாநகர சபையை செயற்படுத்த முடியுமென்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Tags: , ,

Leave a Reply