சீனா-இந்தியா உறவு புத்துயிர் பெறும்போது சிறீலங்காவின் நிலைமை கவலைகிடமாக மாறிவிடும் – ஹரிகரன்

hariharanசீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான உறவு புத்துயிர் பெறும் போது, சிறிலங்காவின் நிலைமை கவலைக்குரியதாக மாறிவிடும் என்று இந்தியாவின் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் கேர்ணல் ஹரிஹரன் தெரிவித்துள்ளது.

புலனாய்வு சம்பந்தமான அவரது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
சீனாவுக்கும், சிறிலங்காவுக்கும் இடையிலான உறவு தற்போது மிகுந்த வளர்ச்சியுடன் காணப்படுகிறது.

இந்த நிலையில் முதல் தடவையாக சீனாவின் ஜானதிபதி இந்த வருடமளவில் சிறிலங்காவுக்கு விஜயம் மேற்கொள்வார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விஜயம் இடம்பெறும் பட்சத்தில், சீனாவை நம்பி சிறிலங்காவால் அமைக்கப்பட்டுள்ள வெளிவிவகார கொள்கை வெளிச்சத்துக்கு வரும்.
ஆனால் சீனாவைப் பொறுத்தவரையில் சிறிலங்காவுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட இந்தியாவுக்கு வழங்கும் முக்கியத்துவம் அதிகமானதாக காணப்படுகிறது.

காரணம் சிறிலங்காவின் சந்தையை காட்டிலும், இந்தியாவின் சந்தை மிகப்பெரியது.

இதற்கிடையில் இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திரமோடியும், சீனாவுடன் நல்லுறவை மேம்படுத்திக் கொள்ளும் எண்ணத்தில் இருக்கின்றமை வெளிப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சீனா சிறிலங்காவின் பக்கம் அதிகமாக சாய்ந்து, இந்தியாவை பகைத்துக் கொள்ளவோ, அல்லது இந்தியாவை சீண்டவோ விரும்பாது என்று கேர்ணல் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

Tags: , , , ,

Leave a Reply