செல்வராகவனின் தம்பி தனுஷ் என்பது எல்லோருக்கும் தெரியும், ஆனால் தனுஷின் தம்பி சிவகார்த்திகேயன் என்பது ‘எதிர்நீச்சல்’ படத்தில் தான் தெரிந்தது.
சிவகார்த்திகேயனுக்கு டம்மி கேரக்டரை கொடுத்து அவனை வேஸ்ட் பண்றோம்னு மனசுக்குள்ள தோணுச்சு. அப்பத்தான் அவனை வெச்சி எதிர்நீச்சல் படத்தை எடுத்தேன் என்று கூறிய தனுஷ் அவன் எனக்கு கூடப் பொறக்காத தம்பி மாதிரி என்று மேடைக்கு மேடை முழங்கி வந்தார்.
சிவகார்த்திகேயனும் தனது சினிமா கேரியரில் எந்த சந்தேகமாக இருந்தாலும் தனுஷை கலந்து ஆலோசனை செய்து விட்டுத்தான் செய்வார். அதேபோல தன் வீட்டில் ஒரு நிகழ்ச்சி என்றால் அது தனுஷ் இல்லாமல் நடத்த மாட்டார்.
அப்படிப்பட்டவர் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வந்ததும் ஏற்றி விட்ட தனுஷ் சிவகார்த்திகேயனை துரத்தி விட்டதாக செய்திகள் பரவியது.
அது உண்மைதான் என்பது போல சமீபத்தில் நடந்த தனுஷின் பேர்த்டே பார்ட்டியிலும் சிவகார்த்திகேயனை பார்க்க முடியவில்லை.
ஆனால் தனுஷுக்கும் எனக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை. அவருடைய பேர்த்டே பங்ஷனுக்கு நானும் போயிருந்தேன். நைட் 10 மணிக்கு ஆரம்பமாக இருந்த பங்ஷனுக்கு நான் 9:30 மணிக்கே போய் விட்டேன். பங்ஷன் முடியும் வரை மறுநாள் அதிகாலை வர நான் அங்கு தான் இருந்தேன்.
பங்ஷன் போட்டோக்களில் நான் இல்லாததால் எல்லோரும் இப்படி ஒரு கட்டுக்கதையை கிளப்பி விடுகிறார்கள் என்றவர் தனுஷுடன் என்னை ஒப்பிடுவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அவருடன் என்னை ஒப்பிடவே கூடாது.
அவருடைய 13 வருட சினிமா கேரியர்ல 25 படங்கள் நடிச்சிட்டார். அந்த அனுபவங்களுக்கு மத்தியில தனுஷுக்கு எப்போதுமே நான் ஈடாக மாட்டேன். இனிமேல் என்னை எப்போதுமே அவருடன் ஒப்பிட்டு பேச வேண்டாம் என்று டென்ஷனாகியிருக்கிறார் சிவகார்த்திகேயேன்.
அண்ணனையும், தம்பியையும் பிரிக்காம விட மாட்டாங்க போலிருக்கே…?
















