நிஜ திருமணம் போலவே ஒரு புகைப்படத்தைப் பார்க்கும் போது எந்த ரசிகருக்கும் அதிர்ச்சி வரத்தானே செய்யும். அப்படி ஒரு அதிர்ச்சியைத்தான் தனது ரசிகர்களுக்கு கொடுத்திருக்கிறார் நடிகர் த்ரிஷா.
ஜெயம் ரவியுடன் பூலோகம், அஜித்துடன் தல 55 ஆகிய படங்களில் நடித்து வரும் த்ரிஷா வயசாகிக் கொண்டே போவதால் திருமணத்தை கூட தள்ளி போட்டுக்கொண்டு படங்களில் நடித்து வருகிறார்.
தெலுங்கு நடிகர் ராணாவை காதலிக்கிறார் என்று சொல்லப்பட்டு வரும் நிலையில் தற்போது இணையதளத்தில் திருமணம் செய்துகொண்ட போன்ற ஒரு புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆனால் விசாரித்த பின்பு தான் தெரிந்தது அது ஒரு கன்னப்படத்தின் புகைப்படம் என்று.
கன்னட நடிகர் புனித் நடிக்கும் படத்தில் த்ரிஷா தான் ஹீரோயின். அந்த ஹீரோவை தமிழர்களுக்கு அவ்வளவாக பரிச்சயம் இல்லை என்பதால் த்ரிஷாவுக்கு நிஜமாகவே திருமணமாகி விட்டது என்று நம்பி விட்டார்கள்.
இதற்கிடையே நான் திருமணம் செய்து கொள்ளப் போவதாக அடிக்கடி செய்திகள் வருகிறது. இதில் உண்மை இல்லை. திருமணம் பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. திருமணம் செய்து கொள்ள எப்போது விரும்புகிறேனோ அப்போது அதை உடனடியாக ரசிகர்களுக்கு தெரிவிப்பேன் என்று கூறியிருக்கிறார் த்ரிஷா.
















