கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் சமீபகாலமாக நயன்தாரா, அனுஷ்கா, காஜல் அகர்வால் போன்ற நடிகைகளின் பெயர்களே அதிகமாக இடம்பெற்றுள்ளன.
இந்த பட்டியலில் சமந்தாவின் பெயர் இதுவரை வந்ததே இல்லை.
காரணம்..லட்சங்களில் சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராகவே இருந்தார் சமந்தா.
அதனால் நம்பர் ஒன் நடிகை யார் என்ற போட்டியிலும் சமந்தாவின் பெயர் இடம்பெற்றதில்லை.
கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் மட்டுமல்ல, நம்பர் ஒன் நடிகை யார் என்ற போட்டியிலும் இனிமேல், சமந்தாவின் பெயர் நிச்சயமாக இடம்பெறும் என்பது உறுதியாகிவிட்டது.
லட்சங்களில் சம்பளம் வாங்கி வந்த சமந்தா, தற்போது சூர்யா உடன் நடித்து வரும் அஞ்சான் படத்தில் நடிக்க ஒரு கோடி சம்பளம் வாங்கி இருக்கிறாராம்.
அஞ்சான் படத்தை தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்போகிறார்கள் என்பதை ஆரம்பத்திலேயே மோப்பம் பிடித்து தெரிந்து கொண்டுவிட்டார் சமந்தா. எனவே இரண்டு மொழிகளிலும் தனக்கு மார்க்கெட் இருப்பதை காரணம் காட்டி ஒரு கோடி சம்பளம் கொடுக்கும்படி கேட்டிருக்கிறார்.
ஆந்திராவில் உள்ள தெலுங்குப்பட விநியோகஸ்தர்களிடம் லிங்குசாமி தரப்பு விசாரித்தபோது, சமந்தா நடித்தால் சில கோடிகள் கூடுதலாக தெலுங்கு டப்பிங் ரைட்ஸ் விலைபோகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
அதன் பிறகே அவர் கேட்ட ஒரு கோடி சம்பளத்தைத் தர ஒப்புக்கொண்டார்களாம்.
அஞ்சான் படத்துக்கு ஒரு கோடி சம்பளம் வாங்கிய சமந்தா, அஞ்சான் வெற்றியடைந்தால் சம்பளத்தில் மேலும் சில லட்சங்கள் உயர்த்த திட்டமிட்டிருக்கிறார். கத்தி வெற்றியடைந்தால் மேலும் சில லட்சங்களை உயர்த்திவிடவும் வாய்ப்பிருக்கிறது.
அனேகமாக இந்த ஆண்டு இறுதிக்குள் சமந்தாவின் சம்பளம் 2 கோடியாக உயர்ந்தாலும் ஆச்சர்யமில்லை.
















