முல்லைத்தீவு மாவட்டத்தின் இறுதி போர் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் மாவட்டத்தின் பாரிய கடற்படை முகாம் ஒன்றினை அமைக்கும் நோக்கில் தமிழ்மக்களின் 671 ஏக்கர் காணியினை கடற்படையினர் அபகரித்துள்ளதாக மக்கள் முறையிட்டுள்ளார்கள்.
இறுதி போர் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பகுதி சிறீலங்கா கடற்படையினரால் அபரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரியவந்துள்ளது இதனை தடுத்து நிறுத்துமாறு பொருமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
முல்லைத்தீவு கரைத்துரைப்பற்று பிரதேச செயலகத்தின்கீழ் உள்ள முள்ளிவாய்க்கால் பிரதேசத்தின் 617 ஏக்கர் நிலத்தினை சிறீலங்கா கடற்படையினர் அபகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரியவந்துள்ளது.பொதுத்தேவைக்கென அடையாளப்படுத்தும் பதாதை நாட்டப்பட்டுள்ளது இதன் ஊடாக கடற்படையினர் அபகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்ககள.
இதில் பொதுமக்களுக்கு சொந்தமான அதிகளவான உறுதிக்காணிகள் காணப்படுவதாகவும் பொதுமக்களின் காணிகளை பொதுதேவை என அடையாளப்படுத்தப்பட்டு சிறீலங்கா கடற்படையினரின் தேவைக்காக அபகரிக்கப்படுவது தொடர்பில் காணி உரிமையாளர்கள் வடமாகாண முதலமைச்சருக்கு தெரியப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.
கரைத்துறைப்பற்று பிரதேசத்தில் முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராமத்தில் 617 ஏக்கர் பொதுமக்களின் காணிகளை 1964 ஆம் ஆண்டிக் 28 ஆம் இலக்க காணிஎடுத்தல் திருத்த சட்டத்தின் மூலம் திருத்தப்பட்ட தவறான காணிகொள்ளல் சட்டத்தின் 2ஆம் பிரிவின் 1ஆம் உட்பிரிவின் கீழ் காணிகளை சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 6ஆம் மாதம் 17 ஆம் நாள் இதற்கான பிரசுரம் ஒட்டப்பட்டுள்ளது . காணிஅபகரிப்பதற்கான காரணம் மாவட்டத்தில் கடற்படை முகாம் அமைப்பதற்கு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.காணி உரிமையாளர்களை அடையாளம் காணமுடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் 2009 ஆம் ஆண்டிற்கு பின்னர் முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்களை மீள்குடியேற்ற அனுமதிக்கப்பட்ட போதும் முள்ளிவாய்க்கால் கிழக்கில் இதுவரை மக்களை மீள்குடியேற்ற கடற்படையினர் அனுமதிக்கவில்லை இந்த நிலையில் குறித்த காணி உரிமையாளர்கள் தங்கள் காணிகள் இருந்தும் வெளி இடங்களில் தங்கி வாழ்கின்றார்கள்.
இன்னிலையில் கடற்படையினரின் இந்த காணி அபகரிப்பினை தடுத்து நிறுத்துமாறு வடமாகாண முதலமைச்சருக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
















