காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளைப் பெறும் நடவடிக்கைகள் இன்று மன்னாரில் ஆரம்பமாகவுள்ளன.
இன்று முதல் நான்கு நாட்கள் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக காணாமல் போனோர் தொடர்பான விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி இன்றும் நாளையும் மாந்தை பிரதேச செயலகப் பிரிவிலும், ஞாயிற்றுக்கிழமை மன்னார் பிரதேச செயலகப் பிரிவிலும், திங்கட்கிழமை மடு பிரதேச செயலாளர் பிரிவிலும் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
















