இந்திய இலங்கை உடன்படிக்கையை மீறும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
காணி உரிமை தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் அரசாங்கம் காலவரோதய சட்டமொன்றை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.
வடக்கு கிழக்கு மாகாணத்தின் சனத்தொகை பரம்பலில் மாற்றம் கொண்டு வர அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் எனவும், இதில் மாற்றங்களை ஏற்படுத்த முயற்சிப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கு கிழக்கு மாகாண சனத்தொகைப் பரம்பலை அடிப்படையாகக் கொண்டே இந்திய – இலங்கை உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
ஓராண்டு காலப்பகுதியில் காணி உரிமை தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிப்பதற்கு முடியாத நிலைமை ஏற்படலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வெளிநாடுகளில் அடைக்கலம் புகுந்துள்ள மக்கள் குறிப்பிட்ட ஓர் காலப்பகுதிக்குள் காணி உரிமை தொடர்பான ஆவணங்களைத் திரட்டி, சமர்ப்பிப்பது நடைமுறைச் சாத்தியமற்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவசரமாக அரசாங்கம் இந்த சட்டத்தை அமுல்படுத்துவதன் உள்நோக்கத்தை புரிந்துகொள்ள முடியவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கு கிழக்கில் காணி தொடர்பில் பல்வேறு பிரச்சினைகள் நிலவி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
பௌத்த மதத்தை தாம் மதிப்பதாகவும், வடக்கில் ஆளில்லா இடங்களில் பௌத்த விஹாரைகள் அமைக்;கப்பட்டு வருவதாகவும் இதன் மெய்யான நோக்கம் என்ன என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டுமெனவும் அவர்வலியுறத்தியுள்ளார்.
எனினும் வடக்கில் காணப்படும் இந்து கோயில்கள் கவனிப்பாரற்றிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
















