பேரினவாத கட்சிகளால் உருவாகின்றது பேராபத்து!!

தமிழ் மக்­களை வளைத்­துப் போடு­கின்ற முயற்­சி­க­ளில் தென்­னி­லங்­கை­யைச் சேர்ந்த கட்­சி­கள் தீவி­ர­மாக ஈடு­பட்­டுள்­ள­ன. ஏற்­க­னவே ஐக்­கிய தேசி­யக்கட்­சி­யும், சிறி­லங்கா சுதந்­தி­ரக்கட்­சி­யும் தமி­ழர்­க­ளி­டையே ஊடு­ரு­வி­யுள்ள நிலை­யில் மக்­கள் விடு­தலை முன்­ன­ணி­யும் அந்த முயற்­சி­யில் ஈடு­பட்டு வரு­வதை அவ­தா­னிக்க முடி­கின்­றது.

வடக்­கில் கால்­ப­திக்க முய­லும்
ஜே.வி.பி.தரப்­பி­னர்
யாழ்ப்­பா­ணத்­தில் இடம்­பெற்ற மக்­கள் விடு­தலை முன்­ன­ணி­யின் மேதி­னக் கூட்­டத்­தில் உரை­யாற்­றிய அந்­தக் கட்­சி­யின் தலை­வ­ரான அநு­ர­கு­மார திச­நா­யக்க ‘‘ வடக்கு மக்­க­ளும் எம்­மு­டன் இணைந்து உரி­மை­க­ளுக்­கான போராட்­டத்­தில் ஈடு­ப­ட­வேண்­டும்’’ என அழைப்பு விடு­வித்­துள்­ளமை இதைத் தௌிவாக எடுத்­துக் காட்­டு­கின்­றது.

தமி­ழர்­க­ளின் உரி­மைக்­கான போராட்­டங்­களை இந்­தக் கட்சி எப்­போ­துமே எதிர்த்து வந்­துள்­ளது. தமிழ் மக்­க­ளுக்கு எவ்­வித உரி­மை­யும் வழங்­கக் கூடாது என்­ப­தில் குறி­யா­கவே இருந்­துள்­ளது. முன்பு சுனாமி பேரிடர் இடம்­பெற்­ற­போது அதற்­குப் பிந்­திய மீள்­கட்­டு­மா­னச் செய­ல­ணி­யில் விடு­த­லைப் புலி­க­ளும் இணைத்­துக் கொள்­ளப்­பட்­ட­னர்.

இதற்கு எதி­ராக நீதி­மன்­றம்­வரை சென்று புலி­களை அந்­தச் செய­ல­ணி­யில் இருந்து நீக்­கிய பெரு­மையை இந்­தக் கட்சி கொண்­டுள்­ளது. வடக்­கும் கிழக்­கும் இணைக்­கப்­பட்­ட­தற்கு கடும் எதிர்ப்­பைத் தெரி­வித்­த­தும் இந்­தக் கட்­சி­தான் என்­பதை எவ­ருமே மறந்­து­விட முடி­யாது. இந்­தக் கட்­சி­யைச் சேர்ந்­த­வர்­கள், இன­வா­தத்­தைக் கக்­கு­வ­தி­லும் முன்­னணி வகித்­தார்­கள்.

தற்­போது புதிய கட்­சி­யொன்றை அமைத்து அதன் தலை­வ­ராக இருக்­கும் விமல் வீர­வன்ச ஒரு கடைந்­தெ­டுத்த இன­வாதி என்­பது அனை­வ­ருக்­கும் தெரிந்த விட­ய­மா­கும். இவர்­கூட ஜே.வி.பியில் இருந்­த­வர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. இன்று அநு­ர­கு­மார திச­நா­யக்க தம்­மு­டன் இணைந்து செயற்­ப­டு­மாறு தமி­ழர்­களை அழைப்­பது அவ­ரது சுய­ந­லத்­தையே காட்­டு­கின்­றது. தமி­ழர்­க­ளின் வாக்­கு­க­ளைக் கவர்­கின்ற கப­டத்­த­னத்­தை­யும் இது எடுத்­துக் காட்­டு­கின்­றது. இவ­ரது மாய வலை­யில் சிக்­கிக் கொள்­ளாது தமி­ழர்­கள் தப்­பித்­துக் கொள்ள வேண்­டும்.

ஏற்­க­னவே வடக்­கில் கடை விரித்­துள்ள
கொழும்­பின் முக்­கிய அர­சி­யல் கட்­சி­கள்
கடந்த உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யும், ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யும் வடக்­குக் கிழக்­கில் கணி­ச­மான வாக்­கு­க­ளைப் பெற்­றன. சில சபை­க­ளின் ஆட்­சிப் பொறுப்­பும் அவற்­றுக்­குக் கிடைத்­தன. தமிழ்க் கட்­சி­க­ளின் எதிர்­கா­லத்­துக்கு இவை நல்­ல­தா­கத் தெரி­ய­வில்லை. அது­மட்­டு­மல்­லாது, தமிழ்ப் பிர­தேசங்­ க­ளில் பேரி­ன­வா­தி­கள் ஊடு­ரு­வு­வ­தற்­கும் இது வழி­கோ­லி­வி­டும்.

சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யை­யும், ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யை­யும் தமி­ழர் பகு­தி­க­ளில் முன்­னி­லைப்­ப­டுத்­து­வ­தில் தமி­ழர்­கள் சிலரே தீவி­ர­மாக ஈடு­பட்­டுள்­ள­னர். இதற்­காக வாக்­கு­று­தி­களை அள்ளி வீசு­கின்ற இவர்­கள், சில உத­வி­க­ளைச் செய்­வ­தி­லும் ஈடு­பட்­டுள்­ள­னர்.இவர்­க­ளின் பசப்பு வார்த்­தை­க­ளால் ஈர்க்­கப்­பட்­ட­வர்­கள் இவர்­க­ளுக்­குப் பின்­னால் அலைந்து திரி­வ­தை­யும் காண­மு­டி­கின்­றது.

ஆனால் இந்த இரண்டு கட்­சி­க­ளும் இணைந்து அமைந்­துள்ள அரசு, தமி­ழர்­க­ளின் பிரச்­சி­னைக­ளுக்­ குத் தீர்வு கண்­டதா? என்­பதை இவர்­கள் சிந்­தித்­துப் பார்ப்­ப­தா­கத் தெரி­ய­வில்லை. மாறி மாறி ஆட்­சிக்கு வந்த இந்த இரண்டு கட்­சி­க­ளும் தமி­ழர்­க­ளைத் தொடர்ந்தும் ஏமாற்­றியே வந்­துள்­ளன. சிறு­பான்­மை­யின மக்­க­ளுக்கு எதி­ராக இடம்­பெற்ற இனக்­க­ல­வ­ரங்­க­ளுக்­கும் இந்­தக் கட்­சிகள்­தான் பொறுப்­புக் கூற­வேண்­டும். இந்த நிலை­யில் தமி­ழர்­கள் தேசி­யக் கட்­சி­களை ஆத­ரித்து நிற்­பதை எந்த வகை­யி­லும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.

தேர்­தல்­க­ளில் தமி­ழர்­கள் தமது பேதங்­களை
கைவிட்டு ஒன்­றி­ணைந்து செயற்­ப­டு­தல் அவ­சி­யம்
உள்­ளூ­ராட்­சித் தேர்­தல் போன்று ஏனைய தேர்­தல்­க­ளி­லும் தமி­ழர்­கள் பொறுப்­பில்­லாத வகை­யில் நடந்து கொண்­டால் தமிழ்க் கட்­சி­க­ளின் பிர­தி­நி­தித்­து­வம் பறிக்­கப்­பட்­டு­வி­டும் என்ற உண்­மையை எம்­ம­வர்­கள் உணர்ந்து செயற்­பட வேண்­டும்.

மகிந்­த­வின் ஆட்­சிக்கு ஆள்­க­ளைச் சேர்க்­கின்ற கைங்­கரி­யத்­தி­லும் எம்­ம­வர்­க­ளில் சிலர் ஈடு­ப­டு­வதை அவ­தா­னிக்க முடி­கின்­றது. இவர்­கள் இன­வு­ணர்வு என்­ப­தையே அறி­யா­த­வர்­க­ளாக இருக்­கி­றார்­கள். இனத்தை விற்­றுப் பிழைப்­ப­தையே தொழி­லா­கக் கொண்­ட­வர்­கள். எட்­டப்­ப­னை­யும், காக்கை வன்­னி­ய­னை­யும் இவர்­க­ளோடு ஒப்பிட்டுக் கூற­மு­டி­யும்.

தமி­ழர்­க­ளி­டையே ஆயி­ரம் வேறு­பா­டு­கள் இருக்­க­லாம். அர­சி­யல் ரீதி­யில் அவர்­கள் பிரிந்து நிற்­க­லாம். ஆனால் தமிழ் மக்­கள் அந்­நிய சக்­தி­க­ளி­டம் சர­ண­டை­வதை எந்த வகை­யி­லும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.

தமி­ழர்­க­ளின் பல­வீ­னத்­தைப் பயன்­ப­டுத்­திக் கொண்டு தென்­னி­லங்கை அர­சி­யல் கட்­சி­கள் தமி­ழர் பிர­தே­சங்­க­ளில் கடை­வி­ரித்­துத் தமது வியா­பா­ரத்தை நடத்­து­வ­தற்­கான அறி­கு­றி­கள் மிகத் தௌிவா­கத் தெரி­கின்­றன. இதை நாம் அனு­ம­திப்­ப­தால் எமது எதிர்­கா­லச் சந்­த­திக்கே பெரும் பாதிப்பு ஏற்­ப­டு­மென்­பதை இவர்­கள் உண­ராது விடு­வார்­க­ளா­யின் அதை­விட வேறொரு முட்­டாள்த்­த­னம் இருக்­கவே முடி­யாது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!